பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் வந்தால், பெண்ணை அழைத்து, அவரை வணங்கச் சொல் வார்கள். அதேபோல் பெண்ணைவிடச் சின்னவர்கள் வந்தால் வந்தவர்கள் பெண்ணை வணங்குவார்கள். இதனால் ஒருவருக் கொருவர் அறிமுகம் ஆவார். இது இரண்டாவது பயன். மூன்றாவது பயன். உடம்புக்கு வலிமை உண்டாவது. தண்டால் எடுப்பதில் பாதிப் பலனாவது நமஸ்காரத்தில் உண்டாகாதா? நம்மிடமுள்ள அகங்காரம், மமகாரம் ஆகிய இரண்டும் அடியோடு எப்போது போகின்றனவோ அப்போது இறைவன் திருவருளுக்குப் பாத்திரம் ஆவோம். அகங்காரம், மமகாரம் ஆகிய இரண்டையும் அழிக்க உதவுவது நமஸ்காரம். எம்பெரு மானுடைய செய்ய தாளினில் அடியற்ற மரம்போல வீழ்ந்து இறைஞ்சினால் சரீர அபிமானம் போய் விடுகிறது. இந்தக் காலத்தில் முதலில் சட்டை அபிமானம் போகும். சட்டையைக் கழற்றிவிட்டுப் போய் விழும்போது சரீர அபிமானம் போகும். பணிவு, அறிமுகம், உடல் பயிற்சி, உடம்பின் மீது கொண்ட பற்றுப் போதல் ஆகிய இவ்வளவும் நமஸ்காரம் செய்வதன் மூலம் வருகின்றன. வாழ்வில் துன்பம் வருகின்ற சமயங்களில் நாம் நிமிர்ந்து வாழவேண்டுமானால் இறைவனுடைய சந்நிதானத்தில் வணங்கி வாழவேண்டும். நிமிர்ந்துள்ள வில் வளைந்தால்தான் அம்பு செல்லுகிறது. வில்லை வளைக்கும் கயிற்றுக்கு நாண் என்று பெயர். நாணினால் வில் வளைகிறது. அதைப்போலவே நாமும் இறைவனுடைய சந்நிதானத்தில், "ஆண்டவனே, எனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாந்து நிமிர்ந்து நின்றேனே! எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு எந்தவிதமான சக்தியும், செயலும் இல்லை” என எண்ணி நாணினால் உடல் வளையும். இறைவனுக்கு முன்னே நாணி வளையும்போது மற்றவர்களுக்கு முன்னே நிமிர்ந்து செல்லும் நிலை உண்டாகும். இறைவனுக்கு முன்னே நாமே நம் நிலையை உணர்ந்து நாணி வணங்கிவிட்டால், உலகத்தோரின் பழிக்கு அஞ்சி நாணித் தலை குனிய வேண்டி வராது. நம் நாட்டுப் பெரியோர்கள் ஆண்டவன் திருவடிகளிலே வீழ்ந்து வீழ்ந்து, நைந்து நைந்து, இறைஞ்சி வாழ்ந்தார்கள். அருணகிரியார் அதை முதலில் சொல்கிறார். க.சொ.11-20 295