பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 செல்லும் காராகவும் தோற்றி இன்பம் அளித்தாற்போல, இறை வனை நம்முடைய இன்ப அநுபவப் பொருளாகவே நாம் உணர்ந்துகொள்ள முடியும். ★ வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளஇங்ங்ண் காண்பதல் லால்மன வாக்குச்செய லாலே அடைதற் கரிதாய் அருவுரு வாகிஒன்று போலே இருக்கும் பொருளைஎவ் வாறு புகல்வதுவே! (வேலாயுதம் விளக்கம் பெறும் திருக்கரத்தையுடையவனாகிய முருகனுடைய சிவந்த திருவடிகளில் விழுந்து பணிந்து அவன்பால் தீவிரமான அன்புகொள்ள, அதனால் தோற்றும் இன்பத்தை யான் நுகரும்படி நுகர்வதன்றி, மனம் வாக்குச் செயலென்னும் மூன்று கரணத்துக்குரிய காரியங்களாலும் அடைவதற்கு அரியதாகி அருவமே தன் உருவமாகி என்றும் மாறாமல் ஒரு நிலையாகவே இருக்கும் பரம்பொருளநுபவத்தை எவ்வாறு சொல்வது? மால் - முறுகிய அன்பு; காதல். இங்ங்ண் என்பது அருணகிரியார் தாம் பெற்ற வண்ணத்தைச் சுட்டுகிறார்; இது நெஞ்சறி சுட்டு. காண்பது - நுகர்வது. மனம் - நினைப்பு: ஆகு பெயர். வாக்கு - பேச்சு. செயல் - உடம்பாற் செய்யும் காரியம். மூன்று கரணத்தையும் கூறினார். அரு உருவாகி - அருவே உருவாகி. ஒன்றுபோலே - ஒரே நிலையில்.) 3 OC)