பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இருந்து இலங்கைக்குப் போய்ச் சண்டை போட்டான். காரணம் பெண்ணான சீதை மேல் இராவணனுக்கு ஏற்பட்ட ராட்சசக் காதல். அதற்கு மூலவித்துத் தூவியவள் சூர்ப்பனகை. ஆண்மை நிரம்பிய ராமனிடத்தில் அவளுக்கு உண்டான ராட்சசக் காமம் அந்த வித்தைத் தூவியதற்குக் காரணம். ஆகவே ஆண்களுக்கும் தீய நிலையில் காமம் வரும். பெண்களுக்கும் தீய நிலையில் காமம் எழும். ராம ராவணப் பெரும் போருக்கு மூல வித்தே காமம். அகலிகைக்கு மிகப் பெரிய துன்பம் வந்ததற்குக் காரணம் இந்திரனது காமம். இப்படியாகக் காமத்தினால் உண்டான இன்னல் கள் மிகப் பல. மனித சாதியினிடத்தில் பல வகைத் தீய குணங்கள் புகுந்துகொண்டாலும் எல்லாவற்றுக்கும் மேலாக, மிகுதியாக இருப்பது காமம். அந்த நோய் எல்லாக் காலங்களிலும் இருக் கிறது. ஆகவே, மருத்துவராகிய அருணகிரிநாதர் அதற்கான மருந்தை அண்டா அண்டாவாகக் கலந்து வைத்திருக்கிறார். மற்ற நோய்களுக்கும் மருந்து அவரது பாட்டுக்களில் இருக்கிறது; ஆனாலும் காமத்தைப் பற்றிச் சொல்கின்ற பாடல்களே திருப் புகழில் மிகுதியாக வருகின்றன. காமம் என்ற சொற் பொருள் நாம் இன்று காமம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் கொள்கிறோமோ அப்படிப் பழைய காலத்தில் கொண்டது இல்லை. காமம் என்றால் காதலுக்குப் பெயர். பிற்காலத்தில் சரீர சம்பந்தமான ஆசையையே காமம் என்று சொல்வது வழக்கமாகி விட்டது. நேர்மையான காமம் இந்த உணர்ச்சி நேர்மையான முறையில் அமைந்திருந்தால் தவறு இல்லை. யார் யார் நெறி தவறாமல் தம்முடைய தர்ம பத்தினியோடு வாழ்க்கை நடத்துகின்றார்களோ அவர்கள் பிரம்ம சாரிக்குச் சமமானவர்கள் என்று நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கை யில் அறத்தைச் செய்வதற்குத் தர்ம பத்தினியை மணம் செய்து கொள்கிறார்கள். அவர் காம பத்தினி அல்ல; தர்ம பத்தினி, தர்மத்தைச் செய்வதற்குத் துணையாக இருப்பவள். 3O4