பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கடமையும் இன்பமும் இவ்வுலகில் பல மரஞ் செடி கொடிகள் இருக்கின்றன. மனித பரம்பரை வளர்வது போல மரத்தின் பரம்பரையும் வளர வேண்டும். அது வளரவேண்டுமானால் விதை உண்டாக வேண்டும். விதை கீழே விழுந்து முளைக்க வேண்டும். இலையிலோ, கிளையிலோ, வேரிலோ நினைத்த இடத்தில் விதை உண்டாகும் படி இறைவன் செய்திருக்கலாம். அங்கெல்லாம் உண்டானால் யாரும் கவனிக்க மாட்டார்கள். எல்லோரும் கவனிக்கக்கூடிய இடத்தில் அதை வைக்க வேண்டும். ஆதலால் இனிமையான பழத்திற்குள் வைத்திருக்கிறான். 'பழத்தை நன்றாகச் சாப்பிடுங்கள். ஆனால் அதற்குள் இருக்கும் விதையை நல்ல இடத்தில் புதைத்தால் அது போன்ற சுவை மிக்க பழங்களைத் தரும் மரம் வளரும்' என்பதைப் போல ஆண்டவன் வித்து நடுவதாகிய கடமையைப் ւյց`ւն தின்பதாகிய இன்பத்தோடு சேர்த்தே வைத்திருக்கிறான். மனிதன் செய்கின்ற வேலைக்குக் கூலி வேண்டாமா? ஆகவே அறத்தை வளர்க்கும் வேலைக்கு முன்கூட்டியே இறைவன் கூலி கொடுக்கிறான், பழமாக. 'நன்றாக இவ்வுலகத்தில் நீ வாழ்வாய்' என்று கை கால்கள் ஆகியவற்றோடு நல்ல உடம்பைக் கொடுத்து அனுப்புகிறான் இறைவன். மலருக்கும், மலத்திற்கும் வேறுபாடு காணாமல் நல்ல ஞானிபோலவே குழந்தை பிறக்கிறது. ஆனால் அது வளர்ந்து, பலவகைத் தொழில் புரிந்து, அல்லாதன புரிந்து, நோயையும் நொடியையும் பெற்று வருந்துகிறது என்றால் அதற்கு இறைவன் என்ன செய்வான்? மனிதனுக்கு எப்பொழுதும் நல்லதையே முன்னால் கொடுக்கிறான். கடமையை மாத்திரம் செய்யச் சொன்னால் மனிதன் செய்ய மாட்டான். "கோயிலுக்குப் போங்கள் என்றால் போக மாட்டான். "மார்கழி மாதம் வெண் பொங்கல் கொடுக்கிறார்கள்' என்றால் ஆண்டாள் பாசுரத்தைப் பாடிக்கொண்டு ஓடுகிறான். மாணிக்க வாசகர் பள்ளி யெழுச்சியைப் பாட வைக்கிறது சுடச் சுடக் கொடுக்கும் பொங்கல். மனிதனுக்கு எப்பொழுதும் இன்பத்தில் 3O8