பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பல் எல்லாம் உதிர்ந்து போன கிழவர் வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை பாக்கைச் சிறிய இரும்பு உரலில் போட்டு இடித்துக்கொண்டிருக்கிறார். மெள்ள மெள்ள இடிப்பதால் ஒசை கேட்கவில்லை. கொட்டில் தாழ்வாரத்தில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் அவரது மனையாட்டி, தலையெல்லாம் தும்பைப் பூவைப் போல நரைத்துவிட்ட கிழவி. அவள் தன் பேரனைப் பார்த்து, "ஏய் போய்ப் பாரடா? கிழவர் கஷ்டப்படுகிறார். நீயாவது கொஞ்சம் வாங்கி அதை இடித்துக் கொடுக்கக் கூடாதா?’ என்கிறாள். அதுதான் உண்மைக் காதல்; உண்மையான அன்பு, பருவம் கடந்தும் பசுமையாக நிலவும் அன்பு. அழகு உடம்பு முதிர முதிரத் தேயும். செல்வமும் நாளடைவில் தேயும். ஆற்றல் தேயும். ஆனால் இந்த அன்பு மாத்திரம் உடம்பு தளரத் தளர வளரும். காமத்தை வெல்ல வழி நல்ல கட்டிளங் காளையாக இருக்கும்போது ஊரைச் சுற்றித் திமிர் பிடித்து அலைந்த எத்தனையோ பேர்கள் வயசு ஆக ஆக அடங்கி ஒடுங்கி நல்லவர்களாக உட்கார்ந்து விடுகிறார்கள். தசைக் கொழுப்பு இருக்கிற வரைக்கும் மனிதனுக்குத் தெளிவு உண்டாவதில்லை. தசைக் கொழுப்பின் கிளர்ச்சியே காமம் என்பது. அதையும் மீறி ஒருவன் தர்மம் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதைத்தான் இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார் அருணகிரியார். கடத்தில் குறத்தி பிரான்அரு ளால்கலங் காதசித்தத் திடத்தில் புணையென யான்கடந் தேன்சித்ர மாதர்அல்குற் படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்.வெங் காம சமுத்திரமே. சமுத்திரம் கரை இல்லாதது. இந்த வெங் காம சமுத்திரத் திற்கும் கரை இல்லை. ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டவன், 31○