பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கொடுமையான காமம். அதனால் அதை, "வெங் காம சமுத்திரம்: - என்கிறார். புறக்கண்களால் வெறும் உடல் அழகை மாத்திரம் பார்ப்பதனால் எழுகின்ற காமம் வெங்காமம். குண நலங்களைப் பார்க்கும் பார்வை வெங் காமத்துக்கு இல்லை. சீதையின் பண்பு சீதா பிராட்டியை இராமனும் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரும் கண்களாகிய வாசல் வழியே நுழைந்து ஒருவர் உள்ளத்தை ஒருவர் தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள். 'பருகிய நோக்கெனும் பாசத் தால்பிணித்து இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார்.' மன்மதன் உலகத்திற்கே அழகு அரசன் அல்லவா? அவனும் சீதையைப் பார்த்தான். அவள் அங்கங்களின் அழகைப் பார்த்தான். சீதா பிராட்டியை அப்படியே சித்திரம் எழுத வேண்டுமென்று நினைத்தான். அவள் உலகத்தை எல்லாம் காத்து ரட்சிக்கின்ற அன்னையாக, திருமகளாக இருக்கிறபொழுது எழுதலாம். இராமன் ஒருவனை அன்றிப் பிறரைக் காணாத கற்புடைய சீதையாக அவதாரம் எடுத்திருக்கிறபோது அவளைச் சித்திரத்தில் எழுதிவிட முடியுமா? நல்ல எழுத்தாளர்கள் கதை எழுதுவதைப் பார்த்து நாமும் எழுதலாம் என்று சிலர் ஆரம்பிப்பார்கள். காகிதம், பேனா எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு உட்காருவார்கள். தலைப்பைப் போட்டுக்கொண்டு ஆரம்பிக்கும் போதுதான் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று யோசிப்பார்கள். அப்படி மன்மதன் செய்தானாம். அமுதம் கலந்த வண்ணத்தைக் குழைத்து வைத்துக்கொண்டு துரிகையை எடுத்துச் சித்திரம் தீட்டப் போனான். சீதையின் உயிரோவியத்தைத் தீட்ட வேண்டும். அவள் குணங்களைக் கண்டு எழுதத் துணிந்தானா? அவள் உள்ளச் சிறப்பை உணர்ந்து தீட்டப் போனானா? இல்லை. சீதையை மற்றப் பெண்களைப் போலவே எண்ணி, அங்க நலங்களைப் பார்த்துத் தீட்டப் போனான்; அவனால் சீதையை எழுத முடியுமா? 3i.2