பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தெப்பம் 'சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். உங்களுக்குத் தெப்பம் ஏது?" என்ற கேள்வி வரும் அல்லவா, மிகவும் வேடிக்கையாக, அழகாக, முரண்பாடுபோலத் தோன்றும்படி விடை சொல்கிறார். கடத்தில் குறத்தி பிரான்அரு ளால்கலங் காதசித்தத் திடத்தில் புணையென யான்கடந்தேன். முரண்பாடா? பசித்தவன் ஒருவரிடத்தில் போய், 'என் பசியை யார் தீர்ப்பார்?' என்று கேட்டபோது, "அவனிடம் போ' என ஒருவனைக் கைகாட்டி விட்டுப் போனார் அவர். ஆனால் இவன் அவனிடம் போய்ப் பார்த்தால், அவன் ஒரு மாதம் பட்டினி, அவனிடம் போனாலா பசி தீரும்? 'வெங்காம சமுத்திரத்தைக் கடந்தேன் என்கிறீர்களே! புணை ஏது?’ என்று கேட்டால் அருணகிரியார், “காட்டில் வாழும் வள்ளி யிடம் ஆசை கொண்டானே, அவன் தந்தான்' என்று சொல்கிறார். 'காமத்தை வெல்லக் காமத்தை வென்றவன்தானே வழி காட்ட முடியும்? ஆனால் நீங்கள் சொல்கிற பேர்வழி காமத்தை வென்றவனா? முன்பே ஒரு மனையாட்டி இருக்க, காட்டில் இருக்கும் குறப்பெண்ணான வள்ளியைத் தேடி ஓடியவனாயிற்றே! அவனைத் துணையாகக் கொண்டால் எப்படிக் காம சமுத்தி ரத்தைக் கடக்க முடியும்?' என்று கேட்கத் தோன்றுகிறது. வள்ளி திருமணத்தின் கருத்தை உணர்ந்தால் அந்தக் கேள்வி எழாது. வள்ளி கல்யாணம் என்பது காமக் கல்யாணம் அன்று; அது ஞானக் கல்யாணம்; காமம் கடந்த கல்யாணம். ஆகவே வள்ளியை ஆட்கொண்ட எம்பெருமானின் அருள் கிடைக்குமானால், வெங்காம சமுத்திரத்தைக் கடக்கலாம். காணும் வழி காமத்தைப் போக்க நினைப்பவர்கள் பெண்களைக் கண் னால் காணமாட்டேன் என்று இருப்பது உலகத்தில் இயலும் 344