பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் அணி எதையும் அவன் பார்க்கவில்லை. திருவடியில் அணிந் திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டுகொண்டான். அவன் பிறன்மனை நோக்காத பேராண்மையாளன். திருக்கோவையாரில் உள்ள காட்சி திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் ஒரு காட்சியை வருணிக்கிறார். ஒரு பெண் ஒர் ஆடவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள். ஆனால் வேறொருவனுக்கு அவளை மணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். தோழியின் மூலம் தன் எண்ணத்தை அந்தப் பெண் தன் பெற்றோர்களுக்கு உணர்த்தச் சொன்னாள். 'இந்தப் பிள்ளை வேண்டாம் அம்மா! இவனைவிட வேறு ஒரு நல்ல ஆடவன் வருவான்' எனத் தோழியும் குறிப்பாக உணர்த்தினாள். அவர்கள் கேட்கவில்லை. பெற்றோர்கள் முடிவுப்படி அந்தப் பெண் வேறு ஒருவனை மணந்துகொண்டால் அவள் கற்பு இழந்தவளாகி விடுவாள். அதைவிட அவள் உயிரை இழந்துவிடலாம். தோழி, "நீ இந்த அறம் மறந்த ஊரில் இருக்கவேண்டாம். உன் தலைவனோடு இரவுக்கு இரவாகவே வேறு எங்காவது போய் விடு' என்று சொல்லி, அவள் காதலனுக்கும் தெரிவித்தாள். தோழியின் யோசனைப்படியே அந்தப் பெண் தன் காதல னுடன் போய்விட்டாள். விடிந்தது; வீட்டிலுள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது பெண்ணைக் காணவில்லை. "எங்கே? எங்கே?' என்று தேடினார்கள். அகப்படவில்லை. தோழியைக் கேட்டார்கள். "நான்தான் அப்பொழுதே குறிப்பாகச் சொன்னேனே, அம்மா. அவளுக்கு முன்பே ஒரு காதலன் இருக் கிறான். அதைத் தெரிந்து கொள்ளாமல் வேறோர் ஆடவனுக்கு மணம் செய்விக்க நினைத்தீர்கள். அவள் கற்பை இழக்கத் துணிய வில்லை' என்று சொல்லிவிட்டாள். தன் உயிரினும் சிறந்த பெண் வீட்டை விட்டே போய் விட்டாள் என்றவுடன் பெண்ணின் தாய்க்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவளை வளர்த்த செவிலித்தாய், "நான் போய்த் 3士了