பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 "என்னையோ அன்னை சொல்லியதே?” என்பதில், அன்னையென்று சுட்டுவதனால் தெரிகிறது. இப்படித் தன் மனைவி ஒருத்தியையே பெண்ணாகவும், மற்றவர்களை எல்லாம் தாயாகவும் பார்க்கும் தமிழரின் பண் பட்ட மரபை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் ஒரு நாடக மாக்கிக் காட்டுகிறார். அம்மையும் அப்பனும் புறத் தோற்றத்தைக் கண்டு, பொறிகளின் வயப்பட்டு அறிவு இழந்து வெங்காம சமுத்திரத்திலே ஆழ்ந்து போகின்றவர்கள் மீள வேண்டுமானால் அவர்களுடைய பார்வை மாற வேண்டும். உலகிலுள்ள பெண்களை எல்லாம் தாயாகப் பார்க்கின்ற பாவம் வர வேண்டும். அன்னையாகப் பார்க்க வேண்டுமென்றால் அன்னைக்குப் பக்கத்தில் அப்பா இருக்க வேண்டும். அப்பாவும், அம்மாவும் கலந்த கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தால் காமத்தைப் போக்கி விடலாம். முருகனை அப்படிப் பார்த்துப் பார்த்துத் தியானம் செய்து காமத்தை வெல்லலாம். சிவப்பிரகாசர் இந்தக் கருத்தைச் சோணசைல மாலையிற் பாடுகிறார். 'கண்புனல் துளிப்ப அழற்படும் இழுதிற் கரைந்துகும் நெஞ்சில்நின் றனையே பெண்பயில் உருவ மொடுநினைந் தெனது பெண்மயல் அகற்றும்நாள் உளதோ?” வெங்காம சமுத்திரத்தைக் கடக்கத் தமக்கு அருளியவன் இன்னானென்று அடையாளம் கூறுகிறார் அருணை முனிவர். கடத்தில் குறத்தி பிரான். காட்டிலுள்ள குறத்தியின் தலைவன், வள்ளி மணாளனது அருளினால் கடந்தாராம். முருகக் கடவுள் என்று சொல்லாமல் வள்ளி காந்தன் என்று சொல்கிறார். "வள்ளி நாயகனின் அருளினால், என்னைக் கலங்க வைத்த நிலை போய்ச் சித்தத்தில் ஏற்பட்ட திடத்தையே புணையாகக் கொண்டு நான் வெங்காம சமுத்திரத்தைக் கடந்துவிட்டேன்' என்று சொல்கிறார். வள்ளி கல்யாணம் என்பது காமக் கல்யாணம் அல்ல, ஞானக் கல்யாணம் என்பதை இது புலப்படுத்துகிறது. 32O