பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கடத்தில் குறத்தி பிரான்அரு ளால்கலங் காதசித்தத் திடத்தில் புணையென யான்கடந் தேன்சித்ர மாதர்அல்குற் படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்வெங் காம சமுத்திரமே. (காட்டில் வாழ்ந்த குறமகளாகிய வள்ளியின் நாயகனாஇறு முருகனுடைய திருவருளால் கலக்கமின்றி இருந்த சித்தத்தின் உறுதி யினால், அவ்வுறுதியே தெப்பமாக யான், அலங்காரத்தையுடைய மாதர்களின் இரகசியத் தானமாகிய அரவுப் படத்திலும் கழுத்திலும் கோவைப் பழம் பழுத்தாற் போன்றுள்ள செம்மையான வாயிலும் மூங்கிலைப் போன்ற தோளிலும் கொப்பூழாகிய இடத்திலும் நகிலிலும் பரந்து கிடக்கும் வெவ்விய காமமாகிய கடலைக் கடந்தேன். கடம் - காடு. முதலில் சித்தம் கலங்குதலை ஒழிந்து பின்பு உறுதி பெற்றமையின், கலங்காத சித்தத்திடம்' என்றார். புணை - தெப்பம், சித்தத்திடமே புணையாக என்று கொள்க. சித்திரம் - அலங்காரம், வியப்பைத் தருவது எனலுமாம். படம் - பாம்பின் படம். பணை - மூங்கில், இங்கே உவம ஆகுபெயராய்த் தோளைக் குறித்தது. உந்தித்தடம் - கொப்பூழ்ப் பிரதேசம். தடம் - பொய்கை எனலுமாம். வெம்.காமம் என்றது முறையற்ற காமத்தைச் சுட்டியது. சமுத்திரத்தைத் திடத்தினால் யான் கடந்தேன்.) 322