பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் அருணகிரி நாதப் பெருமான் வெங்காமக் கடலைக் கடப் பதற்கு இன்னது வழி என்று சொன்னதை முன் பாட்டில் பார்த் தோம். அந்த நினைப்போடு மறுபடியும் அவர் பாடுகிறார். இறை வனை நாடிச் சரண் அடைந்தால் மனத்திலே உண்டாவது திடம்; அந்தத் திடத்தைப் புனையெனக் கொண்டு காமக் கடலைக் கடக்கலாம் என்று சொன்னார். மனத்திலே திடம் எப்படி வரும்? இறைவன் அருளாலே திடீரென்று மனத்திலே திடம் வந்துவிடுமா? முயற்சியும் அநுபவமும் எந்தக் காரியமும் திடீரென்று நடந்துவிடாது. பல பல படிகளில் ஏறிய பிறகே உயர்ந்த மாடியை அடைய முடியும். முயற்சி மெல்ல மெல்ல அதிகமாக ஆக அதனால் ஏற்படும் பலனும் மெல்ல மெல்ல வளர்ந்து வரும். திடீரென்று ஒருவருக்கு உயர்ந்த நிலை வந்ததானால் அது இந்தப் பிறவியின் முயற்சி யினால் வந்த பயன் என்று சொல்ல முடியாது. முற்பிறவிகளில் செய்த முயற்சிகளின் பயன் அது. முயற்சியின் அளவுக்கு ஏற்றபடி அநுபவங்களும் உண்டாகி வரும். சாப்பிட உட்கார்ந்த வனுடைய பசி, பாயசத்திலிருந்து தயிர்ச்சாதம் வரையில் சாப் பிட்ட பிறகுதான் அடங்கும் என்று சொல்லலாமா? ஒவ்வொன் றாகச் சாப்பிடச் சாப்பிட அவன் பசி மெல்ல மெல்லக் குறைந்து வரும். - சாதனம் செய்யும்போது எந்த எந்தப் பக்குவத்தில் இருக்கி றோமோ அந்த அந்தப் பக்குவத்திற்கு ஏற்ப அநுபவம் ஏற்படும். அதனால்தான் குருநாதர் சந்நிதானத்தை அடைந்து, அவர் சொன்ன வழிப்படி மெல்ல மெல்லப் பயின்று வரவேண்டும் என்கிறார்கள். கருவின் உபதேசம் பெற்றவுடனே முடிந்த முடிவாகிய பயன் கிடைத்து விடாது; உழைப்பின்றி ஊதியம் இல்லை.