பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் பிழித்து சாப்பிடுகிறான். இப்படிச் சுவைக்கும் முறை வேறு பட்டாலும் சுவைத்த பின் கிடைக்கின்ற இனிப்பாகிய அநுபவம் ஒன்றாகவே இருக்கும். உலகியல் சம்பந்தமான இந்திரியங்களின் அநுபவத்திலேயே இத்தகைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வாறே இறைவன் அருள்நெறியில் செல்கின்றபோது வேறுபட்ட பல அநுபவங்கள் உண்டு. ஒவ்வொருவரும் பின்பற்றும் சாதனம் வேறு வேறாக இருக்கும். ஒருவர் எம்பெருமான் திருவுருவத்தை அகத்திலே பதித்துக் கொண்டு எப்போதும் தியானத்தில் மூழ்கி இருப்பர். மற்றொருவரோ எம்பெருமான் புகழை நல்ல நல்ல பாட்டாகக் கோத்துப் பாடிப் பரவசமாய் நிற்பர். வேறு ஒருவர் ஆண்டவன் திருவுருவத்திற்கு வண்ண வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பர். இவ்வாறு பல படியாக ஆண்டவனை நினைந்து, வாழ்த்தி, வணங்கி அவன் திருவருளைப் பெற்றவர்கள் எத்தனையோ பேர். அகண்டமான இறைவனைக் கண்டமான உருவத்தில் வழிபடுகிறோம். அந்த உருவங்கள் பலவாக இருக் கின்றன. அதைப் போலவே அவனை அடைவதற்குரிய வழிகளும் பல. இது ஒன்றே வழி என அறுதியிட்டுக் கூற முடியாது. அவர வர்களுடைய நெஞ்சுக்கு ஏற்பப் பல வழிகள் உண்டு. பல மாணாக்கர்கள் ஒரே குருநாதரிடம் சென்றாலும் அவர் அத்தனை மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக உபதேசம் செய்வது இல்லை. ஏனென்றால், அவர்கள் எல்லோருடைய மனமும் ஒரே விதமான பக்குவத்தில் இரா. அவரவர்களுடைய பக்குவத்தை உணர்ந்து, மனத்தின் திண்மையை உணர்ந்து, அவர்கள் எல்லோரும் பயனடையவேண்டுமென்ற கருணையினால் அவரவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் செய்வார் குருநாதர். தம்மை வந்து அடை கின்ற மாணாக்கர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து, அவர்கள் மேலே ஏறும் அடுத்த நிலை இன்னது என்பதைக் கண்டு அதற்கு ஏற்ற உபதேசம் செய்வார். எம்பெருமான் திருவருளைப் பெறுகிற முயற்சி உடையவர் களுக்குக் குருநாதனின் கிருபை இருந்தால் அநுபவம் வர வர உயர்ந்து வரும். அநுபவம் ஏற ஏற அவற்றின் இன்பமும் ஏறிக் கொண்டே இருக்கும். ஒரு பிடி சாப்பிட்ட உடனே அதற்கு ஏற்ற அளவு பசி தணிவது போல, அநுபவம் கொஞ்சம் பெற்ற உடனே 325