பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இன்பம் தலைப்பட ஆரம்பித்துவிடும். படிப்படியாகச் சாதனம் தொடங்கும்போதே முடிந்த முடிபாகிய முத்தியின்பம் கிடைக்கும் என்பது இல்லை. ஆனால் செய்யும் முயற்சி உண்மையானால் அதற்கேற்ற அநுபவம் நிச்சயமாக உண்டாகும். ஒன்றும் செய் யாமல் சும்மா இருப்பதில் பயன் இல்லை. சிறிது செய்தாலும் கூலி உண்டு. இந்தப் பிறவியிலேயே முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெற முடியாமல் போகலாம். அடுத்த பிறவிகளிலாவது கிடைக்கும் என்ற உறுதி உண்டு. உயிர் உடம்போடு வாழும் வாழ்க்கையில் இந்த உடம்போடிருப்பது ஒர் அத்தியாயம். இப்போது ஒரு நல்ல சாதனத்தைத் தொடங்கினால் அது எப்படியும் சிறந்த பயனைப் பெறும்படி செய்துவிடும். இப்போது நாம் செய்கின்ற முயற்சியின் பயன் வரும் பிறவியாகிய அடுத்த அத்தியாயத்தில் உயிரோடு ஒட்டி வரும். 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து’ என்று வள்ளுவர் சொல்கிறார். எனவே இந்தப் பிறவியில் செய் கின்ற முயற்சி கை கூடுமோ கூடாதோ என்று நினைக்க வேண்டாம். இப்பொழுது கை கூடாவிட்டாலும் இந்த முயற்சியின் பயன் வரும் பிறவிகளிலும் தொடரும்; ஏதோ ஒரு பிறவியில் pவ யாத்திரை நிற்கும்; அழியாத இன்பம் வரும். ஆதலால் ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டு இறைவன் அருள் பெறுவதற்குரிய சாதனத்தைத் தளர்ச்சியின்றிச் செய்து வர வேண்டும். கருவின் அருள் பெற வேண்டும். மன நலம் மனிதனுடைய வளர்ச்சி அவன் உடம்பைப் பற்றியது அன்று; மனத்தைப் பற்றியதாகும். மனப் பண்பு வளர வளர மனிதன் வளருகிறான். மனத்தின் இயல்பு ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான். அப்படிப் பற்றுகிற மனம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த பண்புடைய ஒன்றைப் பற்றுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது உயரும். சாமானிய மனிதன் ஒருவன் தன் முயற்சியினால் பொதுஜனத் தொண்டனாகி, நகராண்மைக் கழக 326