பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் வேண்டும். அந்தச் சித்தி கைவரப் பெற்றால் அப்போது உலகம் அவனுக்குள் அடங்கிவிடும்; இந்திரியங்கள் அடங்கிவிடும். மடை மாற்றுதல் மனமோ எப்போதும் திரிந்து கொண்டே இருக்கிறது. அதை எப்படி அடக்குவது? பலவற்றைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனத்தை, "எதைப்பற்றியும் சிந்திக்காதே' என்று எவ்வளவு பலமான கூட்டில் அடைத்தாலும் அது நில்லாது. சிந்திக்கின்ற மனத்தைச் சிந்திக்காதே எனச் சொல்வதைவிட, 'நல்லவற்றைச் சிந்தி' என்று சொல்வது நலம். "இறைவன் சம்பந்தமான விஷயங் களைச் சிந்தி' என்று சொல்ல வேண்டும். அதன் போக்கிலே விட்டு மடைமாற்றிவிட வேண்டும். அதனால்தான் முன்பு, “தடுங்கோள் மனத்தை" என்று சொன்னார், தடுப்பதாவது மடை மாற்றிடுவது. மடை மாற்றிவிட்டு மனத்தைப் போகவிட்டால், இறைவன் என்ற முளையைச் சுற்றியுள்ளவற்றையே நினைக்கச் செய்தால், மெல்ல மெல்ல உணர்வு வரும். இறைவன் திருவடியில் நின்று நிலைத்துத் தூங்கும் நிலை வ்ரும். இறைவனோடு தொடர்புடையவற்றை நினைந்து அது மெல்ல மெல்லக் குறைய, இறைவனையே நினைக் கின்ற நினைப்பு வரும்போது மனம் நிற்கும். அதை மனோலயம் என்பர். மனோலயம் வருவதற்கு முன், பார்க்கின்ற பார்வை, கேட்கின்ற மொழி, செய்கின்ற செய்கை யாவும் இறைவன் நினைப்பிலே கொண்டுபோய் விடுவனவாக அமைய வேண்டும். அநுபவ வேறுபாடு LTர்க்கின்ற பொருள் ஒன்றாக இருந்தாலும் பார்க்கின்றவர் களுக்கு ஏற்றபடி அநுபவம் இருக்கிறது. ஒரு குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் போகிற ஒரு பிள்ளை அதைப் பார்க்கிறான்; பறிக்கிறான்; இதழ் இதழாகக் கிள்ளிக் கசக்கி எறிந்துவிட்டுப் போகிறான். ஓர் ஒவியன் வருகிறான்; அதன் வண்ணத்தையும் மலர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து அப்படியே ஓவியம் தீட்ட உட்காருகிறான். ஒரு கவிஞன் பார்க் கிறான்; 'இந்தத் தாமரையைப் போலல்லவா மிக்க எழிலாக, 33i