பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் அதைப் போலப் பலபலவற்றை நினைத்துத் தாவித்தாவி ஒடிக்கொண்டிருக்கும் குழந்தையாகிய மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மடைமாற்றிவிட்டு இறைவன் சம்பந்தமான பொருளை நினைக்கச் செய்தால், பிறகு இறைவனையே நினைக்கவும், நினைத்து உறங்கவும் பழகிவிடும். பார்க்கின்ற பார்வையில், கேட்கின்ற மொழியில், செய்கின்ற செய்கையில் எப்படி இறை வன் நினைவு வரவேண்டும் என்பதைத்தான் அருணகிரியார் இந்தப் பாட்டில் நமக்குச் சொல்கிறார். எந்தக் காரியத்தைச் செய்தாலும், எந்த இடத்திலே இருந் தாலும் நினைப்பு நமக்கு எதில் ஊன்றி இருக்கிறதோ அதுவே முந்திக்கொண்டு நிற்கும். செருப்பு நினைவு ஒரு வைணவர் பல நாள் செருப்பு இல்லாமல் வருந்தினார். ஒன்று வாங்க வேண்டுமென்று ஆசை. வறுமையினால் வாங்க இயலவில்லை. கடைசியில் வாங்கிவிட்டார். அதைப் போட்டுக் கொண்டு வரும்போது பெருமாள் கோயிலைப் பார்த்தார். பக்தி உடையவர் ஆகையினால் உள்ளே போய்ப் பெருமாளை சேவிக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஆனால் காலிலே போட் டிருக்கும் புதுச் செருப்பை எங்கே வைப்பது? யாரிடமாவது ஒப்படைத்துப் போகலாம் என்றால் யாரும் இல்லை. சட்டெனக் கழற்றி வெளியே வைத்துவிட்டு உள்ளே போனார். விரைவில் வந்துவிடலாமென்று போனார். பட்டர், பெருமாளுக்குத் தீபாரா தனை செய்ய நேரம் செய்தார். இவர் நினைவோ வீதியில் கிடக்கும் செருப்பில் இருக்கிறது. என்ன செய்வார்? தீபாராதனை ஆயிற்று. சடகோபம் சாதிக்க நாழிகையாயிற்று. 'சீக்கிரம் செருப்புச் சாதிக்க வேணும்' என்றார். பெருமாள் சந்நிதியில் இருந்தாலும் அவருக்குச் செருப்புமேல் ஆசை 'செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே" என்று வைணவ நூல்களில் வியாக்கியானத்தில் இந்த உதாரணம் வருகிறது. கினைவு முந்துதல் மனத்திலே எந்த நினைப்பு இருக்கின்றதோ அதுவே முந்திக்கொண்டு வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 333