பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எப்படிப் பார்க்கவேண்டும், எப்படிப் பார்க்கக் கூடாது என்பதைத் தலைகீழ்ப் பாடமாகச் சொல்கிறார். எதிர் நிரனிறை இலக்கணத்தில் நிரல்நிறை என்று ஒன்று உண்டு. 'நான் டவுனுக்குப் போய், மார்க்கெட்டுக்குச் சென்று, திருவல்லிக்கேணி வந்து, குடை, உருளைக்கிழங்கு, நாமக்கட்டி எல்லாம் வாங்கி வந்தேன்' என்றால், 'டவுனுக்குப் போய்க் குடை வாங்கி, மார்க்கெட்டுக்குச் சென்று உருளைக் கிழங்கு வாங்கி, திருவல்லிக் கேணி வந்து நாமக்கட்டி வாங்கி வந்தேன்' என்றாகும். இப்படிக் கூட்டுவதை நேர் நிரல் நிறை என்று இலக்கணத்தில் சொல்வர். இதற்கு எதிராக இருப்பதை எதிர் நிரனிறை என்பர். அருண கிரியார் எதிர் நிரனிறையை வைத்து இப்பாட்டைச் சொல்கிறார். நமக்கு நஞ்சாக இருப்பதை, நாம் செய்யக் கூடாததை முதலில் சொல்லி, நமக்கு நன்மை அளிப்பதை, நாம் செய்ய வேண்டியதைப் பின்னே எதிர் நிரனிறையாகச் சொல்கிறார். எல்லாப் பெண்களைப் பார்க்கும்போதும் காம உணர்ச்சி உண்டாவதில்லை. தாயாகப் பார்க்கும்போதும் சகோதரியாகப் பார்க்கும்போதும் உள்ளத்தில் தீய கருத்து உண்டாகாது. ஆகை யால் பெண்களைப் பார்ப்பதில் தீமை இல்லை. பார்க்கின்ற போது நினைக்கின்ற நினைப்புக்கு ஏற்ப நன்மை, தீமை ஆகிய விளைவுகள் இருக்கின்றன. காம ஊற்றைத் திறக்கின்ற அதே கண்தான் பக்தி ஊற்றையும் பொங்கச் செய்யும். 'பெண்களின் கண்ணைப் பார்த்துச் சேல் எனச் சொல்வதற்குப் பதிலாகச் செந்தில் ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேல் என்று சொல்” என்பது அருணகிரியார் உபதேசம். பாவையர்கண் சேல்என்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை வேல்என்கிலை. நாம் நினைக்கின்ற நினைப்பு, பேரின்பத்திற்கு வழிகோலு வதாக இருக்கவேண்டும். பாவையர்களைப் பார்க்கின்ற பார்வை தவறானது அல்ல; ஆனால் எண்ணம் தவறானதாக இருக்கக் கூடாது; நல்லதாக இருந்தால் நன்மை பயக்கும். 336