பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 யாவும் நமக்கு இறைவனோடு தொடர்புடைய பொருள்களின் நினைவை எழுப்புமானால் சிவகாமம் உண்டாகும். அதனால் தானே ஞானிகள் எல்லாப் பொருளையும் சிவார்ப்பணம் செய்தார்கள்? வரகுணன் வரலாறு வரகுண பாண்டியன் அப்படிச் செய்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தனக்கு வாய்த்த மனையாட்டியை அவன் தனக்குரிய இன்ப அநுபவப் பொருளாகக் கருதவில்லை. தன் னிடமுள்ள எல்லாப் பொருளையும் சிவார்ப்பணம் செய்தவன் அவன். மனைவியைக் கண்டவுடன் அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்று ஆண்டவன் சந்நிதானம் போய், "இந்த அழகிய பொருள் உனக்கு உரியதாகட்டும்' என்றான். சிவலிங்கம் பிளக்கவே உள்ளே இறங்கச் செய்துவிட்டு, இறைவன் ஏற்றுக் கொண்டான் என்ற திருப்தியுடன் வந்தான். மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்ற குருக்கள் கர்ப்பக் கிருகத்தைத் திறந்து பார்த்தார். லிங்கத்திற்கு மேலே ஒரு பெண்ணின் கரம் நீட்டிக்கொண்டிருந்தது. அவருக்கு அச்சம் உண்டாகிவிட்டது. பேயோ, பிசாசோ என்று அலறிக்கொண்டு அவர் ஓடினார். மற்றவர்களும் கேட்டுத் திகிலுற்று ஓடினார்கள். இச் செய்தி வரகுண பாண்டியன் செவிக்கு எட்டிற்று. அவன் ஆலயத்திற்கு ஒடி வந்தான். எம்பெருமான் தலைக்கு மேலே தெரிகின்ற கையைப் பார்த்துத் தன் தலையில் அடித்துக்கொண்டு, 'ஆண்டவனே, இந்தப் பாவி செய்த அபசாரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்று அலறினான். பக்கத்தில் நின்றவர் களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'ஆண்டவனே, உனக்கு நிவேதனமாகும் பொருளை நான் எப்படிச் சமர்ப்பிக்க வேண்டுமோ அந்த முறையில் தவறி விட்டேனே கையைப் பற்றி அழைத்துவந்தது தவறு என்று தெரியவில்லையே! என் கைப்பட்ட அது எச்சில் என்று ஒதுக்கி விட்டாயோ?” என்று சொல்லி அழுதான். உடனே அந்தக் கை உள்ளே போய்விட்டதாம். அத்தகைய பக்தி நம் உள்ளத்தில் தோன்றினால் அவகாமம் தோன்றாமல் சிவகாமம் வரும். ஆண்டவன் அருளுக்கு உரியவர்கள் 338