பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எவை நம்மை மயலில் ஆழ்த்தும் என்று எண்ணி அஞ்சு கிறோமோ அவற்றைக் காணும் முறையை மாற்றிக் கண்டால் அவைகளே முருகனை நினைக்க வழிகோலும். இந்தத் தந்திரத்தை அருணகிரியார் சொல்லித் தருகிறார். "எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லாமல், வேறு விதமாகச் சொல்லி அவகாமத் திற்கு உள்ளாகி, இந்திரியங்களின் ஆட்சிக்கு உட்பட்டுத் துன்புற்றுத் திரிகின்றாயே. உனக்கு எப்படி இன்ப துன்பமில்லாத முத்தி வாழ்வு கிட்டும்?' என்று தம் மனத்தைப் பார்த்து இரங்குவார் போலப் பாடுகிறார். அப்படித் திரிகின்ற நாம் உய்வு பெற வேண்டுமென்றே அவ்வாறு பாடுகிறார். ★ பால்என் பதுமொழி, பஞ்சென் பதுபதம், பாவையர்கண் சேல்,என்பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை வேல்என் கிலை;கொற்ற மாயூரம் என்கிலை; வெட்சித்தண்டைக் கால்என் கிலை;மன மே!எங்ங் னேமுத்தி காண்பதுவே? (மனமே! 'பெண்களின் சொல் பால் என்று சிறப்பித்துச் சொல் வதற்குரியது; அவர்களுடைய அடி மென்மையுடைமையால் பஞ்சு என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அவர்கள் கண் சேல் போன்றது என்று சொல்லியும் எண்ணியும் திரிகின்ற நீ, அவற்றைக் கண்டு திருச்செந்தில் முருகனுடைய அழகிய கையில் உள்ள வேல் என்று கூறவில்லை; அவனுக்குரிய வெற்றியையுடைய மயில் என்று கூறவில்லை; அவனுடைய வெட்சியையும் தண்டையையும் அணிந்த திருவடி என்று சொல்லவில்லை; நான் எவ்வாறு முத்தியின்பத்தை நுகர்வது? என்பது - என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது. இனிமைக்குப் பால் உவமை. மென்மைக்குப் பஞ்சு உவமை. பாவையர் என்பதை மொழி, பதம் என்பவற்றிற்கும் கூட்டுக. என்பதாக - என்று; இது தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதை நினைந்தபடி. செந்திலோன் மாயூரம், செந்திலோன் கால் என்று பின்னும் கூட்டுக. மொழி பால் என்று சொல்லாமல், வெட்சித் தண்டை ஒலியை எண்ணி அந்த நினைவின் தொடர்பால் காலைக் கூறலாம்; அப்படி நீ 340