பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 போன்றவன். பானுகோபன் சூரனுடைய மகன். இந்த நால் வரோடு சூரனும் சேர்ந்தால் ஐவர். இவர்கள் ஐந்து பேர்களும் கந்தபுராணத்தில் வருகின்ற அசுரர்களின் தலைவர்கள். இவர்களோடு போரிட்டுச் சங்காரம் செய்தவன் ஆறுமுகம் படைத்த ஆண்டவன். ஐந்து அசுரர்களையும் அடக்கி ஒழித்துத் தேவர்களுக்கு இன்பம் தந்த பெருமான் ஆறுமுகநாதன். எச்சரிக்கை ஆறுமுகநாதப் பெருமான் அவதாரம் செய்தவுடனே சூரனைப் போய்க் கொல்லவில்லை. "நான் உன் கொட்டத்தை அடக்கத் தான் அவதாரம் செய்திருக்கிறேன். ஜாக்கிரதை' எனச் சூரனுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியவனைப் போல, முன்னாலே தன் அவதாரத்தை அழுகையினால் தெரிவித்தான். பாலுக்காக அழும் குழந்தையைப் போல அழுது காட்டினான். கேட்டு, "ஐயோ, நம்மைக் கொல்ல வந்த எமன் பிறந்து விட்டானே!” எனச் சூரன் அழுதான். ஆனால் அழுத மறுகணமே மாயை அவனை மூடி விட்டது. - - இந்த உடம்பு நிலை அற்றது என்று நமக்கு நன்றாகத் தெரியும். இறந்து போகின்றவர்களின் பிரேதத்தோடு சுடுகாடு போய் வருகிறோம். வீட்டுக்கு வந்த மறுகணமே நாமும் ஒரு நாள் இறக்கத்தானே போகிறோம் என்ற நினைப்பின்றிப் பல காரியங்களைச் செய்கிறோம். அதுதான் மாயை. மாயையின் வாடை படுகின்ற நமக்கே அப்படியானால், மாயையின் பிள்ளை யாகிய சூரனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அவன் அழுதான். மறுபடியும் அதை மறந்து விட்டான். குழந்தை தன் இடுப்பில் கட்டியிருக்கும் கிண்கிணி ஒசையை எழுப்பிற்று. அந்த நாதம் யுத்த காலத்தில் எழுப்புகின்ற ஒலியைப் போல நாலு பக்கமும் முழங்கியது. அந்த ஒலியையும் சூரன் கேட்டான். அப்பொழுதும் அவன் கொட்டம் அடங்கவில்லை. இப்பொழுது முருகன் தன் சின்னக் கையைத் தட்டினான். கை தட்டல் கிராமங்களில் இரவுக் காலங்களில் நீர் நிலைகளுக்குப் போகிற வர்கள் கையைத் தட்டிக்கொண்டுதான் போவார்கள். பூச்சி புழுக்கள் 24