பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் றாகச் செயலற்றுப் போகின்றன. நினைத்தால் பத்து மைல் நடக் கின்ற ஒருவன் முதுமை வந்தபிறகு அடுத்த வீட்டுக்குச் செல்வதற்குக் கூட முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறோம். எந்தப் பொருளை எடுக்க வேண்டுமானாலும் யாரேனும் ஒர் ஏவலாளனைக் கூப்பிடுகிறான். தன்னுடைய உதவிக்குப் பிறரை அழைப்பதால் வீட்டிலுள்ளவர்களே, 'கிழத்திற்கு என்ன வேலை?" என்று வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது, எல்லோராலும் புறக் கணிக்கப்படுகிற நிலையில் பூமிக்குப் பாரமாக உடம்பைத் தாங்கிக் கொண்டு எதற்காக இருக்க வேண்டுமென்று நொந்து கொள்கிறான். உடம்பில் பலமும் கொழுப்பும் இருக்கும் வரையில் உடம் பினால் பெறுகின்ற இன்பமே பெரிதென்று தோன்றும், எத்தனைக்கு எத்தனை முதுமை கூடுகிறதோ அத்தனைக்கு அத்தனை எல் லோரும் இழிபடுத்தும் நிலைமை ஏற்படும். ஒவ்வொரு நிகழ்ச்சி யும் உலகத்தில் வாழ்வதே பெரும் தவறு என்று இடித்துரைப்பது போல இருக்கும். உடம்பு எப்படி வந்ததோ அப்படியேதான் அழியும். பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. பிறந்தவர் இறப்பர் என்பது மட்டும் உறுதி. பிறப்பதையும் கண்ணால் பார்க்கிறோம். பிறந்தவர்கள் இறப்பதையும் கண்ணால் பார்க்கிறோம். இதற் காகப் பெரிய சாஸ்திரங்களைப் படிக்க வேண்டாம். பிறப்பே எல்லாவிதமான துன்பங்களுக்கும் மூல காரணம் என்பதை ஒரு வகையில் உணர்கிறோம். பிறவாமல் இருந்தால் துன்பம் இல்லை என்றும் தெரிகிறது. பிறப்புக்கு மூல காரணம் பாவ புண்ணியச் செய்கைகள் எனப் பெரியவர்கள் சொல்கிறார்கள். அது தெரிந்தும் வாழ்க்கையில் நாம் செய்கின்ற பாவங்கள் எத்தனையோ மூன்று குளங்கள் தண்ணீர் இல்லாத குளம் ஒன்று, தண்ணிர் இருந்தும் பாசி மூடிக் கிடக்கிற குளம் ஒன்று, பாசியே இல்லாமல் படிகம் போலத் தெளிவான நீர் உள்ள குளம் ஒன்று. இவை மூன்றும் இருக்கின்றன. தண்ணீரே இல்லாத குளத்தால் பயன் இல்லை. பகுத்தறியும் ஞானம் இல்லாத விலங்கினங்கள் இந்த இனத்தைச் சார்ந்தவை. தெளிவான தண்ணீரை உடைய குளத்தைப் போன்ற க.சொ.11-23 343