பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் நம் வீட்டில் சமையற்கட்டு இருக்கிறது. அதற்கு அப்பால் வெகு தூரத்தில் தோட்டத்திலே கொண்டு போய்க் குப்பைத் தொட்டியை வைக்கிறோம். பண்டக சாலைக்கு அருகில் குப்பைத் தொட்டியை வைப்போமா? உடம்பும் ஒருவகை வீடுதான். இந்த வீட்டில் உணவுப் பாண்டமும், மல பாண்டமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் இருக்கின்றன. மனிதன் உடம்புக்குள் போவது சம்பா அரிசிச் சோறு, மலைப் பழம், கோதுமை அல்வா என்று பலவகை. வெளிப்படுவன எல்லாவற்றுக்கும் மலம் என்று ஒரே பெயர். 'உண்டன மலமாம்' என்கிறார் பட்டினத்தார். வெவ்வேறு விலாசத்தோடு, வெவ்வேறு மதிப்போடு உலகத்தில் எத்தனை பொருள்கள் நிரம்பியிருந் தாலும் அவை யாவும் மனிதனது உடம்புக்குள் போய் வெளி வந்தால் எல்லோராலும் அருவருத்து ஒதுக்கத்தக்க மலமாகின்றன. உடம்பின் எந்தப் பாகத்திலிருந்து எது வெளிப்பட்டாலும் அதை வெறுக்கிறோம். உடம்பே ஒரு மல பாண்டம். இதைப் பட்டினத்தார் போன்றவர்கள் வெறுத்தார்கள். எத்தனையோ பேர் உடம்பை வெறுப்பதாகப் பேசுகிறார்கள். ஆனால் உள்ளத்தில் பல மாசுகள் கொண்டு உலாவுகிறார்கள். உள்ளம் பாசத்திலே ஊன்றிக் கிடக்கிறது. தம்முடைய பேச்சுக் களால் உடலை வெறுக்கின்ற அவர்கள் யாவருமே உள்ளத்தால் உடம்பை வெறுப்பது இல்லை. உடம்பை விடாமை உடலை வெறுப்பது உண்மையானால், முதுமையினாலும், நோயினாலும் அவதியுறுகிறவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளவா வழி இல்லை? அவர்களுக்கு உடம்பைவிட மனம் வரவில்லை; அதனால் உடம்பினால் துன்பம் உண்டானாலும் அதைத் தாங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். குடியிருக்கும் வீட்டில் ஒருவனுக்குப் பல தொல்லைகள் வீட்டுக்காரனோ தினமும் பொழுது விடிந்தால் சண்டைக்கு. வருகிறான். வீட்டைக் காலி பண்ணிவிட்டுப் போ என்று விரட்டு கிறான். மழை பெய்தால் தாரை தாரையாக வீடு ஒழுகுகின்றது. 345