பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கூடாதா?’ என்று வேண்டிக் கொண்டது. ஆண்டவன் அப்படியே செய்தான். 'பாம்பு பாம்பு!" என்று அதைக் கண்டு பயந்து ஒடினர் சிலர். வேறு பலர் கம்பை எடுத்துக் கொண்டு அது வெளி யில் தலை காட்டும்போதெல்லாம் அடிக்க ஒடி வந்தனர். தன்னைவிட மனிதர்கள் பலமுள்ளவர்கள் என்று அதற்குத் தோன் றியது. "ஐயோ! இவர்களுக்குப் பயந்து கொண்டு நான் எத்தனை காலம் உயிர் வாழ்வேன்! எல்லாவற்றையும் அடக்கியாளும் சக்தி உடைய மனிதனாக என்னை ஆக்கிவிடக் கூடாதா?’ என்று அந்தப் பாம்பு இறைஞ்சியது. இறைவன் திருவருளால் அது மனிதப் பிறவியையும் எடுத்து விட்டது. அவன் ஏழையாக அன்றாட வாழ்க்கைக்கு அல்லலுற்றான். அப்போது, 'என்னைச் செல்வன் ஆக்கமாட்டாயா?" என வேண்டினான். செல்வனான பிறகு மனக் கவலை அதிகமாகி விட்டது. அவன் தேவனானான். அப்போதும் துயரம். இறுதியில், எந்தப் பிறவி எடுத்தாலும் துன்பம் உடன் வரும் என்ற உணர்வு உண்டாயிற்று. - 'ஆண்டவனே, நான் என்ன என்ன வேண்டும் என்று கேட்டேனோ அவற்றை எல்லாம் தந்தாய். ஆனால் நான் கேட்டவை எல்லாவற்றாலும் எனக்குத் துன்பமே வந்தன. என்னுடைய ஆசையினாலே எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்று அவ்வுயிர் வருந்துகிறது. 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' என்று வள்ளுவர் சொல்கிறார். எந்த எந்தப் பொருளோடு மனிதனுக்குத் தொடர்பு இல்லையோ அந்த அந்தப் பொருளால் அவனுக்கு வருகிற துன்பம் இல்லை. தொடர்பு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றி னால் வருகின்ற துன்பமும் அதிகமாகும். எத்தனைக்கு எத்தனை மனசிலே பற்று இல்லாமல் ஒட்டு இல்லாமல் வாழ்கிறானோ அத்தனைக்கு அத்தனை இன்பம். ஒரு சின்ன புல்லாக இருந்து, பெரிய தேவனான வரையில் எந்தப் பிறவியிலாவது இன்பம் உண்டா? குறையினால் இளைத்தது தவிர நிறைவு உண்டாகவில்லை. ஆகவே குறைவு உடைய 348