பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் அவர் முத்தி அடைந்தார் என்பதே அதற்குப் பொருள். நடராஜப் பெருமான் தன் திருவடியைத் தூக்கி ஆடுகிறான். சிலம்பு ஒலிக்கும் அத்திருவடியைப் பற்றிக் கொண்டால் உய்வு உண்டு. அந்தப் பதத்தை முக்தி என்று சொல்வர். 'முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு' என்று சாஸ்திரம் சொல்கிறது. “மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று விடுஉற்றேன்" என்கிறார் மாணிக்கவாசகர். 'இனிமேல் இந்தப் பொய்யான குடிலில் புகுதா வகை செய்ய வேண்டும். துன்பமில்லாத வேறு ஒரு வீடு கொடுக் கிறேன் என்றால் எனக்கு இனி உடம்பாகிய வீடு வேண்டாம். என்றைக்குமே இன்பதுன்பமில்லாத வீடு ஒன்று வேண்டும். அது எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது தாமரை போன்று இருக்கும். அதையும்விடச் செக்கச் செவேல் என்று இருக்கும். அதுதான் உன் கழல். அந்தக் கழல் வீடு தந்து அருள வேண்டும்' என்று அருணகிரியார் முருகனைப் பார்த்து வேண்டுகிறார். 2 சிந்து வெந்து கொக்குத் தறிபட்டு எரிபட்டு உதிரம் குமுகுமெனக் கக்கக் கிரிஉரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே. தத்துவங்கள் எல்லாம் கடந்த நாயகனாகிய எம்பெருமான், தன்னுடைய கருணைத் திறத்தினாலே முருகனாக எழுந்தருளினான். மாயையின் பிள்ளையாகிய சூரனைச் சங்காரம் செய்து, தேவ லோகத்திற்குக் காவலனாக நின்றான். அந்தக் கதையை நினைத்துப் பாடுகிறார். சூரசங்காரம் உலகத்திற்கு வருகின்ற துன்பமெல்லாம் மாயா சம்பந்தத் தால் வருவன. சூரன் மாயையின் பிள்ளை. அவனால் எத்தனை துன்பம் உண்டாகியிருக்கும்! சூரபன்மன் தேவர்களுக்கும், மற்ற நல்லவர்களுக்கும் சொல்ல முடியாத தீங்கை விளைவித்து வந்தான். அவனுக்கு ஒரு கவசம் போல் இருந்தது வெள்ளி மலை. கிரெளஞ்சாசுரனாகிய அந்த 351