பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் முருகப் பெருமான், சூரனுக்குக் கவசம் போன்றிருந்த கிரெளஞ்ச கிரி பொடியாகவும், சூரனுக்கு ஒளிய இடங்கொடுத்த கடல் வற்றிப் போகவும், மாமரமாக நின்ற அவன் தறிபட்டு எரிபட்டு உதிரம் குமுகுமெனக் கக்கி அழிந்து போகவும் தன்னுடைய கையில் உள்ள வேலை விட்டான். கதிர்வேல். அந்த வேல் கதிரை உடைய வேல்; நல்ல வழியிலே செல் பவர்களைக் காப்பாற்றுவதையே தன் வேலையாக உடைய பெருமான் ஒளிமிக்க கதிர்களை உடைய தன் வேலைப் பிரயோகம் பண்ணி னான். அது ஞானத்தின் உருவம். கதிர்வேல் தொட்ட காவலனே! சூரபன்மனும் அவனது துணைவர்களும் அழிந்து ஒழியும்படி யாகக் கதிர்வேல் தொட்ட காவலனை நோக்கிப் பிரார்த்தித்துக் கொள்கிறார். 'எம் பெருமானே, உன் பெருமை எனக்குத் தெரியாதா? நீ கதிரை உடைய வேலைப் படைத்த காவலன் அல்லவா? நீ தேவர்களுக்கு வாழ்வு அளித்தாய். சூரன் ஒளிந்த கடல் சுவறிப் போகும்படி செய்தாய். சூரனுக்குக் கவசம் போன்றிருந்த மலை பொடியாகும்படி செய்தாய். மாமரமாக நின்ற சூரன் உடல் தறிபட்டு, எரிபட்டு, ரத்தம் குமுகுமெனக் கக்க அழிந்து போகும் படி செய்தாயே! நானும் இனி உடம்பென்னும் பொய்யான குடிலில் புகுதாவகையில், புண்டரீகத்தினும் செக்கச் சிவந்த உன் கழல் வீட்டைத் தந்தருள மாட்டாயா?" என்று இறைஞ்சுகிறார். சூரன் என்பவன் அகங்காரம். கிரெளஞ்சாசுரன் மமகாரம். அகங்காரத்தை உள்ளடக்கி ம.மகாரம் சுற்றிச் சூழ்ந்து விரிந்து கிடக்கிறது. எம்பெருமான் திருக்கரத்திலுள்ள ஞான வேல் நமது உள்ளங்களிலும் பாய்ந்தால் மமகாரம் முதலில் ஒழிந்து, பின்னர் அகங்காரமும் நாசமாகி விடும். அகங்காரம், மமகாரம் ஞானத் தால் ஒழிந்தால் முடிவில்லாப் பிறவியை ஒழித்து, எம்பெரு மானுடைய கழலடி பெற்று உய்வு பெறலாம். ஞானமே முருகன் திருக்கரத்தில் உள்ள வேல். ★ 353