பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பொக்கக் குடிலில் புகுதா வகைபுண்ட ரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட்டு எரிபட்டு உதிரம் குமுகுமெனக் கக்கக் கிரிஉரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே! (பொய்யான குடிலைப்போன்ற உடம்பிலே இனிப் புகுந்து பிறவ: வண்ணம் தாமரையைக் காட்டிலும் மிகச் சிவந்த நின் திருவடியாகி மோட்ச வீட்டைத் தந்தருள்வாயாக. சூரன் மறைந்த கடல் தீப்பட்டு சுவறி சூரனாகிய மாமரம் துண்டுபட்டுத் தீய்ந்து, இரத்தம் குமுகு( வென்று வெளிப்படவும் கிரெளஞ்சமலை உருவும்படியாகவு. கதிரையுடைய வேலாயுதத்தை விட்ட காவற் பெருமானே! பொக்கம் - பொய், வஞ்சனை. குடில் - குடிசை. கழலாகிய வீடு சிந்து - கடல். கொக்கு - மாமரம். தறிபட்டு - வெட்டுப்பட்டு. தொட்ட வீசிய.)