பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உள் கின்ற நாக்கு தஞ்சை மாவட்டத்தில் திருக்கருகாவூர் என்று ஒரு தலம் இருக்கிறது. அதன் பெயர் திருக்களாவூர் என மருவி வழங்கு கிறது. அந்த ஊரில் உள்ள அம்பிகையின் பெயர் கருக்காத்த நாயகி. கருவுற்ற மகளிரைக் கருச்சிதையாவண்ணம் காப்பாற்று கிறவள் அந்த அம்பிகை. இன்றைக்கும் அம்பிகை சந்நிதியில் எண்ணெய் வார்த்து அந்த எண்ணெயைக் கருவுற்ற மகளிர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அம்பிகை, கருக் காக்கின்ற ஊர் ஆதலாலே அதற்குத் திருக்கருகாவூர் என்று பெயர். அந்தத் தலத்துக் கடவுளைப் பற்றி அப்பர் சுவாமிகள் ஒரு பாட்டுப் பாடு கிறார். பெரிய பாட்டு. அதிலே நமக்கு வேண்டியது ஒர் அடி. 'உள்நின்ற நாவுக்கு உரையாடியாம்' எனப் பாதி அடியில் சொல்கிறார். நாடகங்களில் திரைக்கு முன்னாலே மேடையில் வேஷம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் நடிப்பார்கள். திரைக்குப் பின்னால் இருந்து ஒருவன் நடிகன் பேச வேண்டிய பேச்சுக்களை மெள்ளப் படிப்பான். அவனுக்குப் 'ப்ராம்ப்டர் (Prompter) என்று ஆங்கிலத்தில் பெயர். எவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும் அவன் சொல்ல வேண்டிய வார்த்தைகள் விட்டுப் போகாமல் இருக்க, உள்ளே இருந்து ப்ராம்ப்டர் சொல்லிக் கொண்டே இருப்பான். அதே போன்ற ஒன்று நாம் பேசுகையில் நிகழ்கிறது. நாக்குப் பேசுகிறது. இந்த நாக்குப் பேசுவதற்கு முன்னாலே உள்ளே இருக்கிற நாக்கு ஒன்று பேசுகிறது. வெளியே இருக்கிற நாக்காகிய ஏட்டுக்கு அடி ஏடு உள்ளேயுள்ள நாக்கு. புறத்தில் இருக்கிற கண்ணைப் புறக்கண் என்கிறோம். அதே போல அகத்தில் கண் இருக்கிறது. அது அகக்கண். கண் மாத்திரம் அல்ல. காதும் இருக்கிறது. உள்ளே இருக்கிற நாக்குப் பேசு வதைத்தான் நினைப்பு என்று சொல்கிறோம். உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதை வெளியே இருக்கிற நாக்கானத ஒலியை அதிகப்படுத்திக் கூட்டியும், குறைத்தும் வெளியிடுகிறது. 'இல்லை, இல்லை. வெளியே இருக்கிற நாக்குத்தான் பேசு கிறது" என்றால் ஊமைக்கும் நாக்கு இருக்கிறதே, அவனால் 42