பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வடி வைத்ததுமே எம்பெருமானின் மணம் பாட்டில் மணந்தது. பாட்டும் வெள்ளமாக வருகிறது. நான் பாடினேன் அல்லேன், எம்பெருமான் பாட வைத்தான். நான் வாக்கினாலே பாட, என் உள்ளத்திலே தன் திருவடியை வைத்தான். அவன் திருவடி பட்ட தனால் மணக்கின்ற அடிநாக்கின் மணந்தான் வெளி நாக்கிலிருந்து வெளிப்படுகிறது' என்று அலங்காரமாகச் சொல்கிறார். சுவடுபடாத உள்ளம் குருக்ஷேத்திரத்தில் என்றோ ஒரு நாள் பாரத யுத்தம் பாண்ட வர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்தது என்று எண்ணுகிறோம். ஒவ்வொரு நாளும் நம் உள்ளங்களில் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் போர். ஒரு கோடி மாயா சக்திகள் நமது உள்ளங்களிலே நித்தம் போராடி அவற்றை எல்லாம் போர்க் களமாக்குகின்றன. போர்க்களத்திலே அர்ச்சுனனுக்குக் கீதை உபதேசம் செய்த கண்ணபிரான் நித்தம் நமது உள்ளங்களிலேயும் கீதை படிக்கிறான். ஆனால் அந்தக் கீதையைக் கேட்பதற்குச் சக்தி இல்லாமல் இருக்கிறோம். துன்பப்படுகிறோம். எம் பெருமான் நம் உள்ளங் களிலேயே இருக்கிறான். மனச்சாட்சியாக இருக்கிறான். இருந்தும் அவன் அடிச்சுவடு நம் உள்ளங்களிலே விழவில்லை. காரணம் என்ன? ஒரு திருடன் எப்படி ஓடினான் எனப் போலீஸார் துப்பு விசாரிக்கிறார்கள். அந்த வீட்டிற்கு உள்ளே திருடன் எந்த எந்தப் பக்கம் போயிருப்பான் என்று பார்க்கிறார்கள். கீழே காலடிச் சுவடு எதுவும் இல்லை. தோட்டப் பக்கம் வருகிறார்கள். முதல் நாள் இரவு மழை பெய்ததனால் தோட்டம் ஈரமாக இருக்கிறது. அந்த ஈர மண்ணிலே திருடன் காலடிச் சுவடு படிந்திருக்கிறது. உள்ளே காலடிச் சுவடு இல்லை. அங்கே ஈரமில்லை. ஈரமில்லாத கட்டாந்தரையில் எப்படிக் காலடிச் சுவடுபடும்? அதுபோல், நமது உள்ளங்களிலே இறைவன் நடமாடின போதிலும் அவன் காலடிச் சுவடு விழவில்லையே! என்றால், நம் உள்ளங்கள் காய்ந்த கட்டாந் தரையாக இருக்கின்றன. அவற்றை அன்பு நீரால் நனைந்த தரையாக்கினால் அவன் காலடி தானே விழும். அருணகிரிநாதப் பெருமான் உள்ளம் அன்பினால் 44