பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் நனைந்து ஈரமாக இருப்பது. நாய்கள் நடமாடுகிற உள்ளத்திலே நாய்களின் சுவடு இருக்கும். மனிதன் நடமாடுகிற இடத்திலே மனிதர்களின் சுவடு இருக்கும். முருகப் பெருமான் நடமாடுகிற உள்ளம் உடையவர் அருணகிரியார். ஆகவே, அங்கே முருகப் பெருமானின் சிற்றடி பதிந்திருக்கிறது. காமம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய அழுக்குகளை வேரோடு களைந்து எடுத்தவர் ஆதலால் எம்பெருமான் அவரது உள்ளத்திலே பல பல சுவடுகள் உண்டாகுமாறு எப்போதும் ஒடி ஆடிக் கொண்டிருக்கிறான். அது எப்படித் தெரியும்? மன ஏட்டிலே அவன் திருவடி படுகின்றது; பாட்டு வெளி வருகின்றது; அவன் வைக்கின்ற ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு பாட்டாக மலர்கிறது. உள்ளமும் உரையும் நமக்கு அப்படி வராததற்கு நமது உள்ளங்களிலே முருகன் சிற்றடிகள் பதியவில்லை என்பதுதான் காரணம். கோபத்தின் அடி படுகிறது. அதன் பயனாக நமது நாவில் வசவு கொப்புளிக்கிறது. காமத்தின் அடி பதிகிறது. அதனால் பைத்தியக்காரச் சொற்கள் வருகின்றன. திரு.வி.க. அவர்கள் வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். அரசியல் மேடைகளின் நடக்கும் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டு, 'நாம் முன்னோர்கள் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று வகைத் தமிழ் இருப்பதாக வரையறை செய் தார்கள். அந்த மூன்றுக்கும் மேல் நான்காவதாக வசைத்தமிழ்' என்ற ஒன்று இப்பொழுது வளர்ந்து வருகிறதே' என்று சொல் வார்கள். இனிமையான தூய சொற்கள் நம் வாக்கிலிருந்து வர வேண்டுமானால் நம் உள்ளங்கள் தூயனவாக இருக்க வேண்டும். நாம் பேசுகிற பேச்சு நமது உள்ளங்களின் நினைவையே எடுத்துக் காட்டுகிறது. உள்ளம் நன்றாக இருந்தால் தவறான பேச்சைச் சொல்ல வேண்டுமென்றாலும் வராது. ஒரு பெரியவர் இருந்தார். அவர் தூய உள்ளம் உடையவர். அவருக்கு வசவே வராது. ஒரு வெள்ளைக்காரன் அவர்மேல் கோபம் கொண்டு கண்டபடி அவரை ஆங்கிலத்தில் வைதான். 45