பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் அந்த அறிவைப் பிடித்துக் கொண்டே செருக்கு வந்துவிடும். அதனால் ஏமாந்து போகாமல் உயர்ந்த நிலையப் பெற்றவர் தாம் உயர்ந்த நிலையில் இருப்பதை மறந்து விட வேண்டும். தாம் பெற்ற பேற்றாலே உயர்ந்த நிலை ஒன்று; அதனை மறந்து விடுவதனாலே மேலும் உயர்ந்த நிலை ஒன்று; ஆக இரண்டு உயர்வு அப்போது கிடைக்கும். ஆணவம் இல்லாத உரை பிறருக்கு உபதேசம் செய்ய வருகின்ற அருணகிரிநாதப் பெருமான், "நான் இந்த அதிகாரம் உடையவன்' என்று நினைத்துச் சொல்லவில்லை. "நானா பாடுகிறேன்? எம் பெருமான் திருவடி பட்டதனால் அல்லவா இந்தப் பாட்டு வருகிறது?’ எனச் சொல்வதன் மூலம் செருக்கைத் தொலைத்துக் கொண்டு, பிறகு உபதேசம் செய்கிறார். அவர் செய்யும் உபதேசம் நம்மிடத்தில் உள்ள பரிவினால் வருவது. பல பக்தர்கள் தவித்துக் கொண்டிருப் பதைப் பார்த்து, அவர்களுக்கும் வழி காட்டி அழைத்துப் போக எண்ணிப் பின்னே திரும்பி வந்து, அழைத்துப் போகும் ஒருவரைப் போல அவர் பேசுகின்றார். அவரது உள்ளத்தில் அன்பும், பரிவும் இருக்கின்றன. ஆணவம் இல்லை. வழி உண்டா? அவரிடம் ஒருவர் கேட்கிறார். "நான் ஆண்டவனது திருவருளைப் பெற வேண்டும். எனக்குச் சாஸ்திரம் எதுவும் தெரியாது. யோகம் பண்ணத் தெரியாது. ஞான விசாரம் செய்யும் ஆற்றல் இல்லை. நான் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். வாழும் போதே இறைவன் திருவருள் எனக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழி உண்டா?' என்று கேட்கிறார் ஒரு பக்தர்; பக்தர் என்பதைவிட ஆசை உடையவர் என்று சொல்லலாம். இறைவன் திருவருள் வேண்டுமென்ற ஆசை உடையவரா னாலும் அதற்கு ஏற்ற வகையில் உழைக்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. மனைவி மக்களிடையே வாழவேண்டும். சாதாரண மாகத் தினமும் சாப்பிடுவதையே சாப்பிட வேண்டும். எந்த எந்தக் காரியங்களைச் செய்து வருகிறோமோ அந்த அந்தக் 43