பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் தடுங்கோள் மனத்தை. மணிவாசகர் அநுபவம் மாணிக்கவாசகப் பெருமான் தம்முடைய சொந்த அநுபவம் ஒன்றை இப்படித்தான் மிக அழகாகச் சொல்கிறார். "ஆண்டவனே, நான் உன்னை அடைவதற்கு எந்தக் காரியத்தையும் செய்ய வில்லையே! நான் இருந்தபடி இருந்தேன். என் இந்திரியங்களை நிக்கிரகம் செய்தேனா? இல்லையே கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். காதால் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். அப்படி இருக்கும்போது என்னை நீ ஆட் கொண்டோயே! அது என்ன ஆச்சரியம்?' என்று வியப்பெய்திப் பேசுகின்றார். ஆண்டவன் அவரை எப்படி ஆட்கொண்டான்? அவரே சொல்கிறார்: "ஆண்டவனே, நான் பல பல பொருள்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்தச் சிந்தனையை அடைக்கவில்லை. ஆனால் அதை உன் பக்கம் திருப்பிவிட்டேன்; நீ திரும்பும்படி அருள் செய்தாய். என் கண்கள் ஏதேதோ பார்த்துக் கொண்டே இருந்தன. அந்தப் பார்வையை நான் நிறுத்தவில்லை. அதை உன் பக்கம் திருப்பிவிட்டாய். வாய் எதை எதைப் பற்றியோ பேசிக் கொண்டே இருந்தது. அந்த வாயை அடைக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும்படியாகச் செய் தாய். ஆகவே நான் முன்பு எப்படி சிந்தித்துப் பார்த்துக் கேட்டுப் பேசிக்கொண்டு இருந்தேனோ, அப்படியேதான் இருந்து கொண் டிருந்தேன். ஆனால் அவை முன் போய்க் கொண்டிருந்த பாதையைத் திருப்பி, உன் பக்கமாகப் போய்க் கொண்டே இருக்கும்படி செய்தேன்; மடை மாற்றிவிட்டேன். அவ்வளவுதான்' என்றார். ஓர் ஒட்டைக் குடம் இருக்கிறது. அந்த ஒட்டைக் குடத்தில் தண்ணீரை எவ்வளவு தடவை நிரப்பி வைத்தாலும் தண்ணீர் அந்தத் துவாரத்தின் வழியாக ஒழுகிப் போய்விடுகிறது. அந்த ஒட்டைக் குடத்தில் அமுதத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் விட்டாலே ஒழுகிப்போய்விடுகிற ஒட்டைக் குடத்தில் அழுதத்தை விட்டால் ஒழுகிப் போகாமல் இருக்குமா? அமுதக் கடலாக இருக்கிற இறைவனிடத்திலிருந்து அமுதத்தை அகப்பையினால் எடுத்துக் குடத்திற்குள் விட்டால் ஒழுகிப் போகும். ஆகவே மாணிக்கவாசகர் என்ன செய்தார்? அந்தக் குடத்தையே அமுதக் க.சொ.11-5 55