பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தள்ளுகிறான். அப்பொழுது முருகப்பெருமானது உருவம் நமக்குத் தெரிகிறது. அப்பொழுதுதான் அந்த உருவம் வரவில்லை. அதற்கு முன்னாலேயே அதற்குள் மறைந்திருந்த உருவத்தை அந்தச் சிற்பி மாத்திரம் கண்டான். இப்பொழுது நாமும் காணும்படியாகச் செய்தான். அதைப் போல, நம்முள் இருக்கிற இறைவனது அருள் ஒளியை நாம் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் அவன் உள்ளே இல்லை என்பது அல்ல. அதற்குத் தடையாக இருக்கிற பொருள்கள் தங்களைக் காட்டுகின்றன; அந்த அருள் ஒளியைத் தடை செய்கின்றன. அவற்றை நாம் செதுக்கி எறிந்துவிட்டால் அந்த அருள் ஒளி தானே வெளிப்படும். சூரும் குன்றமும் யாருடைய அருள் வெளிப்படும்? எழு பாரும்உள்ளக் கொடுங்கோபச் சூருடன், குன்றம் திறக்கத் துளைக்க வைவேல் விடும்கோன் அருள்வந்து தானே உமக்குவெளிப்படுமே. “விடுங்கோள் வெகுளியை" என்று சொன்னார். வெகுளி இருந்தால் கொடுங்கோபச் சூரன் ஆவோம். சூரன் அகங்காரத்தின் உருவம், அகங்காரத்தின் விளைவு, மமகாரம், அந்த மமகாரமே கிரெளஞ்சாசுரன், சூரனுக்குக் கவசம் போல் இருந்தவன் அவ்வசுரன். கிரெளஞ்சாசுரனாகிய குன்றத்திற்குள் சூரன் ஒளிந் திருந்தான். 'என் வீடு, என் மனைவி, என் பிள்ளை' என்று விரிந்து கொண்டே போகின்ற மமகாரத்திற்குள் ஒளிந்திருப்பது நான் என்ற அகங்காரம். ஆண்டவன் தன்னுடைய கூர்மையான வேலைக் கிரெளஞ்ச மலைக்குள் செலுத்தி மலையும் தவிடு பொடியாகப் போகும்படி செய்தான், அதனுள் ஒளிந்து கொண் டிருந்த சூரனையும் அழிந்து போகும்படி செய்தான். மலை போலச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிற மமகாரம், அதற்குள் ஒளிந்திருக்கும் நான் என்ற அகங்காரம் ஆகிய இரண்டையும் தன்னுடைய ஞானமாகிய வேலைச் செலுத்தி ஒழிப்பவன் முருகன் என்பதை இந்தத் திருவிளையாடல் புலப்படுத்துகிறது. 64