பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வாழ வேண்டுமென்பது இறைவன் கருணை. எழுபாரும் உய்ய வைவேல் விடும் கோன் அவன். 'சூரனும் கிரெளஞ்சாசுரனும் அழிந்தால், அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால், உலகம் சுபிட்சத்தை அடையும். தான தர்மங்கள் நடைபெறும். தவம் செய்ய முடியும்' என்று கண்டு கொண்டு தன்னுடைய வேலைச் செலுத்தினான் முருகன். அந்த வேல் கூர்மையானது; வைவேல். - 'இவ்வாறு கூர்மையான வேலை விட்ட முருகனுடைய அருள் வந்து தானே, உமக்கு வெளிப்படும். மனத்தைத் தடுத்து, கோபத்தை அழித்துவிட்டு ஈட்டி வைத்திருக்கின்ற பொருள்களைத் தானம் செய்து, நீங்கள் இருந்தபடி இருங்கள்' என்பது அருண கிரியார் உபதேசம். தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்என்றும் இடுங்கோள்; இருந்த படிஇருங் கோள்; எழு பாரும்உய்யக் கொடுங்கோபச் சூருடன், குன்றம் திறக்கத் துளைக்க, வைவேல் விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. (மனத்தை அதன் போக்கிலே விடாமல் தடுங்கள்; கோபத்தை விட்டு விடுங்கள் என்றும் தானம் இடுங்கள்; அந்த நிலையில் இருந்தபடியே இருங்கள்; அப்போது, ஏழுலகமும் உய்யும்படியாக, கொடுமையான கோபத்தைக் கொண்ட சூரனோடு கிரெளஞ்சமென்னும் குன்று திறக்கவும், கூர்மையான வேலை விடும் இறைவனாகிய முருகனது அருள் தானே வந்து உமக்கு வெளிப்படும். தடுங்கோள், விடுங்கோள், இடுங்கோள், இருங்கோள் என்பன வழக்குச் சொற்கள். சூர்-சூரபன்மன், குன்றம் - கிரெளஞ்சமலை. வைகூர்மை).