பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். ஆகவே, இந்தப் பொருளைக் காப்பாற்றப் பகலும் கூடாது, இரவும் கூடாது' என்று நினைக்கிறது. பகலும் இரவும் பகல் என்பது நினைப்பு; ராத்திரி என்பது மறப்பு. பகலானது, உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டே போகிற நிலை. இரவாவது, செயலை மறந்து தூக்கத்திற்குள் அடங்கிக் கிடக்கிற நிலை. இந்த இரண்டு நிலையும் நமக்குப் பயன் ஒன்றையும் அளிக்கவில்லை. பகலும் இரவும் நாம் ஓயாமல் ஒழியாமல் வேலை செய்கிறோம். இரவில் படுத்துத் தூங்குவதும் ஒரு வேலைதானே? அவை உயிருக்கு நலம் செய்யும் பயனை அளிப்பதில்லை. ஒரு குருநாதருக்கு ஒரு சிஷ்யன் கிடைத்தான். ஒரு நாள் ராத்திரி அவர் அந்தச் சிஷ்யனிடம், “நாளைக் காலை செங்கற் பட்டு வரையில் போகவேண்டும்” என்றார். மறுநாள் காலையில் பத்து மணிக்குச் சிஷ்யன் வந்து நின்றான். அவன் காலில் முழங்கால் மட்டும் புழுதி. "எங்கேயடா போயிருந்தாய்?' என்று கேட்டதற்கு அவன், "செங்கற்பட்டு வரையில் போக வேண்டு மென்று அவ்விடத்தில் உத்தரவாயிற்றே; அதன்படி போய்விட்டு வந்தேன்" என்றான். குருநாதர் உத்தரவிட்டது உண்மைதான். ஆனால் அவன் செய்தது பயனில்லாத காரியம். "எதற்காகப் போக வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்?' என்று கேட்டுக் கொள்ளாமல் அவன் போய் வந்தால் பயன் என்ன? இப்படியே நாம் சுறுசுறுப்பாக எத்தனைதான் வேலை செய் தாலும் அதனால் இன்பம் வராது. பகல் முழுவதும் உத்தியோக சம்பந்தமாகவோ வீண் காரியங்கள் சம்பந்தமாகவோ நம்முடைய உழைப்பை எல்லாம் ஈடுபடுத்தி விடுகிறோம். ஆத்மாவுக்கு இன்பத்தைத் தரக்கூடிய காரியம் ஒன்றைக்கூடச் செய்வதில்லை. இரவிலோ அந்தச் செயல்கூட அற்றுத் தூங்கிக் கிடக்கிறோம். நனவாகிய நிலை சகலாவஸ்தை; தூக்கமாகிய நிலை கேவலா வஸ்தை. சகலத்தில் பயனற்ற வீண் வேடிக்கைக் காரியங்களைச் செய்கிறோம். கேவலத்தில் அந்த முயற்சியும் இல்லாமல் தூங்கு கிறோம். ஆகவே, பகலும் இரவும் நமக்கு இன்பத்தைத் தருவ தில்லை. ஆத்மாவுக்கு இன்பத்தைத் தருவதற்குப் பகல் இர அற்ற இடம் வேண்டும். க.சொப்-6 ア1