பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை வெட்சி பூத்த தண்டைப் பாதர விந்தம் அரணாக, இறைவன் தண்டை அணிந்திருப்பதால் அவன் வரும்போது, 'இறைவன் வருகிறான், வருகிறான்' என்று பக்தர்களுக்கு அது ஒலி செய்து காட்டுகிறது. 'அந்தத் திருவடித் தாமரைகளை நமக்கு அரணாகப் பற்றிக் கொண்டு போவோம் வா, மனமே என்கிறார் அருணகிரியார். காலும் வேலும் நாம் பற்றிக் கொள்வது கால். நமக்கு அஞ்சல் என்று சொல்வது கை. நாம் தண்ணீர் விடுகிற இடம் வேர். நமக்குக் காய் தருகிற இடம் செடியின் மேற்பகுதி. அவனது திருவடியைப் பற்றிக் கொண்டு கண்ணிர் விட்டு, நீயே சரணம்' என்று கதறி னால் அவன் கை, 'அஞ்சல்' என்று சொல்லும். அவனது வெட்சி பூத்த, தண்டை அணிந்த பாத தாமரையைப் பற்றிக் கொண்டால், அவன் கையிலுள்ள வேல் நம்மைப் பாதுகாக்கும்; நாம் பாது காப்பான இடத்தை அடையலாம். அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மாஇருக்கப் போதாய். இப்போதே "இனி இங்கே ஒரு கணமும் இருக்கக் கூடாது. இந்தச் சமயமே இங்கிருந்து கிளம்பிவிடு. வேறு இடத்திற்குப் போய் விடுவோம்' என்கிறார் அருணகிரி முனிவர். அது எப்படிப்பட்ட இடம்? பகலும் இரவும் அற்ற இடம்; நினைப்பும் மறப்பும் அற்ற இடம்; நமக்கு கிடைத்துள்ள ஞானச் செல்வத்தைக் கள்வர்கள் பறித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்று பயப்பட அவசியம் இல்லாத இடம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் சொல்வது இங்கே நினைவுக்கு வருகிறது. புலவன் ஒருவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டான். முருகன் எங்கே இருக்கிறான் எனத் தேடி, வீடு, வாசல், மாடு, மனைவி எல்லாவற்றின் மேலும் உள்ள 77