பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை களாகவே இருக்கிறார்கள். நல்ல காற்று வாங்குவதற்குக் கொஞ்சம் கூட இடம் இல்லை. எங்கே பார்த்தாலும் மூச்சு காற்று. எங்கே பார்த்தாலும் கட்டிடங்கள். வஞ்சனையும் சூதுமே நிரம்பியிருக் கின்றன. இந்த இடத்தில் இருக்க வேண்டாம், வா. போகலாம், மனமே.”* அல்லும் பகலும் இல்லாச் சூதான தற்ற வெளிக்கே........ போதாய். சூதானதற்ற வெளி இரவு அற்ற இடம் என்றால், அங்கே பகல் உண்டு என்று தோன்றும். பகல் அற்றது என்றால் இரவு உண்டு என்று ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இனமானவை. வெண்டாமரை என்ற சொல் செந்தாமரை என்ற இனத்தை நினைப்பூட்டுகிறது. அதைப் போல இரவு என்று சொன்னால் பகல் இருப்பது நினைவுக்கு வருகிறது. அந்த வெளியோ பகலும் இரவும் இல்லாத இடம். மறதி, நினைப்பு ஆகிய இரண்டும் அங்கே இல்லை. மறதி நினைப்பு அற்ற, இரவு பகல் அற்ற இடம்; சூது அற்ற இடம்; வெறும் வெட்டவெளியான இடம் அது. வெளி என்பது ஆகாசம். ஆகாசம் ஐந்து பூதங்களுக்குள் ஒன்று; மற்றப் பூதங்களை எல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருப்பது; அது பூதாகாசம். அந்த வெளி சூதுடைய வெளி. அதற்குமேல் ஓர் ஆகாசம் உண்டு. அதற்குச் சிதாகாசம் என்று பெயர். அது எல்லாவற்றை யும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. பூதாகாசத்திற்குத் தோற்றம் உண்டு; முடிவு உண்டு. சிதாகாசத்திற்கு அவை இல்லை. முன்பு ஒரு பாட்டில், கால எல்லை, பூத எல்லை, இட எல்லை யாவை யும் கடந்த ஒர் இடத்தை, "வெறும் பாழ்' என்று சொன்னார். அந்தப் பாழைக் குறிப்பிடுக்கின்றது, 'அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளி' என்பது. கால எல்லைக்குள், பூத எல்லைக்குள், மூச்சுக் காற்றுக்குள் அடங்கி வாழ்கின்ற நாம் காலனுக்குப் பயப்பட்டே வாழ வேண்டும். இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில், இரவும் பகலும் அற்ற வெளியில் சிதாகாசத்தில் இருக்கின்ற இறைவனோடு நாம் போய்ச் சேர்ந்து விடலாம். அங்கே போய் ஒளித்துக் கொண்டால் வேறு யாருக்கும் தெரியாது. 79