பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 என்ற திருவகுப்பிலும் இந்தச் சொல்லை அருணகிரியார் வழங்கு கிறார். அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டில், நம்மைப் போன்று உலக இன்பங்களுள் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு மிகவும் எளிதான சாதனம் ஒன்றைச் சொல்கிறார். இறைவனைத் தியானம் செய்வதற்கு நமக்கு ஆற்றல் இல்லாவிட்டாலும் அவன் திருக் கரத்திலுள்ள வேலை மெல்ல மெல்லக் கண்டு நெஞ்சில் கொண்டு பலமுறை தியானித்துப் பழக வேண்டும். அந்தத் தியானம் கோயி லுக்குப் போகும்போது மாத்திரம் செய்வது என்பது அல்ல; வீட்டில் இருக்கும் அமைதியான நேரத்தில் செய்வது என்பதும் அல்ல; எல்லாக் காலத்திலும் செய்வதற்கு உரியது. நாம் நம் முடைய மனையாட்டியோடு காம நுகர்ச்சி பெறும் போதும் வேலை மறக்காமல் இருக்கலாம். திருப்புகழில் இத்தகைய நிலையைத் திருப்புகழிலும் உணர்த்துகிறார். 'முருகுகமழ் மலரமளி மீதினிற்புகுந்து முகவனச மலர்குவிய மோகமுற்றழிந்து மொழிபதற வசமழிய ஆசையிற் கவிழ்ந்து விடுபோதும் முழுதுணர வுடையமுது மாதவத்துயர்ந்த பழுதில்மறை பயிலுவஎ னாதரித்துநின்று முனிவரர்சுரர் தொழுதுருகு பாதபத்ம மென்றும் மறவேனே." தாயுமானவர் வாக்கு இதே கருத்தைத் தாயுமானவர் ஒரு பாட்டில் அழகாகச் சொல்கிறார். உடலுக்கு இன்பம் தரும் எந்த நிலையில் இருந்தாலும் இறைவன் அருளை மறவாமல் இருக்கவேண்டும் என்று அவர் வேண்டிக் கொள்கிறார். 'கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னிழல் வைகினும், குளிர்தீம் புனல்கை அள்ளிக் கொள்ளுகினும், அந்நீரிடைத்திளைத் தாடினும், குளிர்சந்த வாடைமடவார் 98