பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கிறார். ஆதலின் இத்தகைய மனநிலை சாத்தியமானதே என்பதை உணரலாம். 女 கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேல்மற வேன்;முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே! (கற்கண்டை உண்டாற் போன்ற இனிய சொல்லை உடையவர்களும் மென்மையை உடையவர்களுமாகிய மகளிர்பால் காம உணர்ச்சியினால் பெறும் கலவியின்பமாகிய கள்ளை எல்லையின்றி மேற்கொண்டு நுகர்ந்து யான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தாலும், உன் வேலை மட்டும் மறக்கமாட்டேன்; முதிய பேய்க் கூட்டங்கள் தமக்கு விருந்துணவு கிடைத்த மகிழ்ச்சியினால், டுண்டுண் டுடு டுடு டுடு டு டுடு டு டுண்டு டுண்டு டிண் டிண்டு என்ற ஒலி எழும்படியாக முரசுகளைக் கொட்டிக் கொண்டு கூத்தாடும்படி கொடிய சூரனைப் போர்க்களத்தில் சங்காரம் செய்த, மயிலாகிய குதிரையை நடத்தும் வீரனே! கண்டு உண்ட சொல் - கண்டைப் போன்ற சொல் என்பதும் பொருந்தும்; உண்ட உவம உருபு. மெல்லியரால் வரும் காமம். காமத்தின் விளைவாகிய கலவி. கலவி - மகளிரோடு கூடுதல். இங்கே அதனால் வரும் இன்பத்துக்கு ஆயிற்று: ஆகுபெயர். மொண்டு உண்ணுதலாவது வரையறையின்றி மனம்போனபடி நுகர்தல், அயர்கினும் - மறந்தாலும். கூளி - பேய் டுண்டுண் எனவரும் ஒலிக் குறிப்பால் கொட்டியது முரசம் என்று கொள்க. சூர் - சூரனை. ராவுத்தன் - குதிரை வீரன்) 93