பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் கொள்ளாமல், தன்னுடைய விதியினால் ஏற்பட்டது என்று நினைந்தால், இனி நல்ல காரியங்களைச் செய்ய முயல்வான் நல்ல எண்ணத்துடன்தான் பெரியவர்கள் விதி என்ற உண்மையைத் தெரிவித்தார்கள். சோதிடம் கேட்டல் முந்திய பிறவியின் பயனாகவே நல்லதும் தீயதும் உண்டா கின்றன என்பதை உணர்பவர்கள், பின்னால் என்ன நேரிடும் என்பதை உணர இயலாது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை உந்த மரத்தடியிலோ, பாலத்தடியிலோ உட்கார்ந் திருக்கும் சோதிடனிடம் போகிறார்கள். மூடியிருக்கும் எதிர்காலப் புத்தகத்தைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் தூண்டச் சோதிடம் கேட்கிறார்கள். நன்மையோ, தீமையோ முந்திய ஊழ்வினையினால் விளையும் எனக் கருதி இறைவன் திரு வருளைப் பெற முயலவேண்டும். இறைவன் திருவருள் பலம் இருந்தால் விதியினால் உண்டாகின்ற துன்பத்தின் உறைப்பு நமக்கு இராது. அப்படி இல்லாமல், இனி என்ன நடக்கும் என்று சோதிடம் பார்த்துத் துன்பமாக இருந்தால் முன்னால் இருந்தே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்பமாக இருந்தால் கர்வப்படுகிறோம். பின்னாலே இன்பம் வரும்போது அதன் இனிமை குறைந்து விடுகிறது. சோதிடத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்றை அஸ்ட்ரானமி (Astronomy) 6Tsūsplb, loft@prairsop out-grough (Astrology) என்றும் சொல்வார்கள். காலத்தைக் காண்பதற்குரிய பகுதி வான சாஸ்திரம். வாழ்க்கையில் உண்டாகின்ற இன்ப துன்பங்களைச் சொல்வது சோதிடம். கடமையிலிருந்து சிறிதளவும் வழுவாத மக்கள் இன்ன இன்ன காரியங்களை இன்ன இன்ன காலங்களில் செய்ய வேண்டுமென்று வரையறுத்திருந்தார்கள். அந்தக் கால நியதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக வான நூலாகிய சோதிடத்தை எழுதி வைத்தார்கள். வேதத்திற்கு அங்கங்கள் ஆறு. சோதிடம் வேதத்தின் கண் என்பார்கள். வேதத்தில் விதித்த கர்மாக்களை நன்கு செய்வதற்குரிய காலத்தைத் தெரிந்து கொள்வதற்குப் பஞ்சாங்கத்தைக் கணித்தார்கள். க.சொ.111-8 iC3