பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 காலக் கணக்கைத் தெரிந்து கொண்டு காரியங்களை வழுவாமல் செய்த மக்கள் மிகுதியாக இருந்தபோது காலத்தை நிர்ணயிக்கும் பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை பிற்காலத்தில் வளர ஆரம்பித்தது. நாளும் கோளும் சோதிடம் சொல்பவர்கள் நாளையும் கோளையும் பார்க் கிறார்கள். நாளும் கோளும் என்று சேர்த்துச் சொல்வது ஒரு மரபு. நாள் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிக்கும். மற்ற நட்சத்திரங்களுக்கு மீன் என்று பெயர். கோள் என்பது கிரகம். இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளில் அடங்கும். ஒன்பது கிரகங்கள் இந்தப் பன்னிரண்டு ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றன. அப்படிச் செய்வதனால் அந்த அந்த நட்சத்திரங்கள் அந்த அந்தக் காலங்களில் உரியவர்களுக்குச் சிலவகையான பலன்களை உண்டாக்கும் என்று கூறுகிறார்கள். கிரகங்கள் ராசிகளில் சஞ்சாரம் செய்வதைக் கிரக சாரம் என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஏதேனும் துன்பம் வந்தால், "என் னுடைய கிரகசாரம்' என்று சொல்வதை இக்காலத்தில் கேட்கிறோம். நாம் செய்த பண்டை வினையின் பயனாக இந்தப் பிறவியில் இன்ப துன்பங்கள் விளைகின்றன. நம்முடைய பழைய வினைக்கு ஏற்ப நாளும் கோளும் அமைகின்றன என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. அதனாலே தமக்கு வருகிற இன்ப துன்பங்களை முன்கூட்டியே நாளைக் கொண்டும் கோளைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். கடவுள் நம்பிக்கையும் சோதிடமும் இறைவனிடத்தில் நம்பிக்கை உடையவன் சோதிடம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. "நவக்கிரகங்களின் போக்கை முன்னால் தெரிந்து கொண்டால் அவற்றால் நமக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கிக் கொள்ளக் கிரக சாந்தி செய்யலாம். அதனால் துன்பம் குறையாதா?’ என்று சிலர் நினைக்கிறார்கள். போலீஸ்காரனுக்குப் பயந்து அவனிடம் போய்ப் பேசுவதைக் காட்டிலும் போலீஸ்காரர்களை ஆட்டி வைக்கிற அதிகாரியிடத்தில் iO4