பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 உருக்குலைக்கின்றன. வாழ்வு முற்றும்போது உயிரைக் கொண்டு போவதற்கு வருகிறான் கூற்றுவன். முதல் மூன்றுக்கும் நாள், கோள், வினை என்று அடைமொழி எதுவும் இன்றிச் சொல்லி, நான்காமவனாகிய கூற்றுவனை, கொடுங்கூற்று என்று சொன்னார் அருணகிரியார். அப்படிச் சொன்னாலும் அந்தக் கொடும் என்ற சொல்லை முதல் மூன்றுக்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை இலக்கணக்காரர்கள், "இடைநிலைத் தீவகம்" என்பர். கொடும் என்ற சொல் நடுவில் விளக்குப் போல நின்று நாள், வினை, கோள் என்று முன் உள்ளவற்றோடும், கூற்று என்று பின் உள்ளதோடும் இயைகிறது. நாளிலும் கோளிலும் இருவகை உண்டு. நல்ல நாளும், பொல்லாத நாளும் நல்ல கோளும், பொல்லாத கோளும் உண்டு. அப்படியே வினையிலும் நல்ல வினையும், தீய வினையும் உண்டு. நாள் கோள் வினை ஆகியவற்றில் நல்லவற்றால் மனிதனுக்கு இன்பமே விளைகிறது. மனிதன் நல்ல நாளைக் கண்டு அஞ்சுவது இல்லை. நல்ல கோளையும், நல்ல வினையை யும் கண்டும் அஞ்சுவது இல்லை. அவன் கொடிய நாளையும், கொடிய கோளையும், கொடிய வினையையும் கண்டு அஞ்சுகிறான். அதனால் கொடுங்கூற்று என்பதிலுள்ள கொடும் என்பதை மற்ற மூன்றுக்கும் கூட்டுவதே பொருத்தம். என்னை நாடிவந்த கோள் என் செயும்? என்கிறார் அருணகிரியார். எல்லோருக்கும் பொதுவாகக் கிரகம் இருந்தாலும் அதனுடைய சாரம் ஜாதகனின் நாளுக்கு ஏற்றபடி இன்ப துன்பங்களைச் செய்கிறது. அந்தக் கிரகம் அவனை நாடி வந்து பயனைக் கொடுப்பது போலத் தோற்றுகிறது. சோதிடத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. வானிலுள்ள கிரகங்களை வான சாஸ் திரத்தின் மூலமாகவும் விஞ்ஞானக் கருவிகளின் வாயிலாகவும் தெரிந்தவர்கள் கிரகங்களால் நமக்குப் பலன் உண்டாகின்றன என்பதை நம்புவது இல்லை. நாம் நம்புகிறோம். கிரகங்களால் வாழ்க்கையில் நன்மை தீமைகள் உண்டாகின்றன என்று நினைப் பதற்கே ஒரு வகை நம்பிக்கை வேண்டும். பூமியைப் போல உருண்டையாக இருக்கிற ஏதோ ஒன்றுக்கும் நமக்கும் என்ன 1O6