பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் சம்பந்தம் என்று அறிவாளிகள் கேட்பார்கள். அப்படி இல்லாமல் சூரியன் முதலிய கிரகங்களால் நம்முடைய வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் உண்டாகின்றன என்று நம்பியே சோதிடத்தைப் பார்க்கிறோம். அந்த நம்பிக்கையைப் பின்னும் மிகுதியாக்கி, எம்பெருமான் திருவருள் இருந்தால் கிரகத்தினால் விளைகின்ற துன்பங்கள் நமக்கு வாரா என்று நினைத்துக் கொள்ளலாமே! அப்படி நினைப்பதைத்தான் அருணகிரியார் நமக்கு இந்தப் பாட்டில் கற்றுக் கொடுக்கிறார். சோதிடமும் உபாசனையும் சோதிடம் சொல்பவர்களைக் கேட்டாலும் ஓர் உண்மை புலப்படும். சோதிட சாத்திரத்தில் நல்ல அறிவு உடையவர்களாக இருந்தாலும் ஒரு தெய்வத்தை உபாசனை செய்தால்தான் வாக்குப் பலிக்கும் என்று சொல்வார்கள். பெரும்பாலும் சோதிடம் கூறு பவர்கள் முருகன், பராசக்தி, ஆஞ்சநேயர் ஆகியவர்களில் ஒருவரை உபாசனை செய்கின்றவர்களாக இருப்பார்கள். அப்படி ஒரு கடவுளை உபாசனை செய்து அதன் மூலமாக நவக்கிரகங் களைப் பற்றித் தெரிந்து கொள்வாரிடம் சோதிடம் கேட்பதை விட நவக்கிரகங்களை மறந்து இறைவனையே வழிபட்டுச் செம்மாந்து இருக்கலாமே! காலத்தைக் காட்டுவதற்குக் கடியாரம் இருக்கிறது. கடி யாரத்தின் முகத்தில் இரண்டு முட்கள் இருக்கின்றன. அதுமாதிரி வினை என்ற கடியாரத்தில் கோள் என்ற பெரிய முள்ளும், நாள் என்ற சிறிய முள்ளும் இருக்கின்றன. இறைவன் எல்லாக் காலத் திற்கும் பெரிய அளவு கருவியாகிய சூரியனைப்போல இருக் கிறான். சூரியனைப் பார்த்துத் தக்கபடி காலத்தைத் தெரிந்து கொள்பவர்களுக்கு கடியாரம் தாமதமாகப் போனாலும், விரை வாகப் போனாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கடியாரத்திற்குச் சாவி கொடுக்க வேண்டுமே என்கிற கவலையும் இராது. இறைவனுடைய திருவருளால் நம்முடைய வாழ்வில் நலம் உண்டாகும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால் நாளும் கோளும் நமக்கு ஒன்றும் செய்யா. அவை நமக்கு அநுகூல மாகவே இருக்கும் என்பது பக்தர்கள் கண்ட துணிவு. 1Ο7