பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் போது நாள்களும் கோள்களும் நமக்குத் துணை செய்யும். அவற் றால் நமக்கு எத்தகைய துன்பமும் வராது" என்று ஒரு பதிகமே பாடினார். அதற்குக் கோளறு திருப்பதிகம் என்று பெயர். 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறும் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று பாடினார். "இறைவன் என்னுடைய உள்ளம் புகுந்த அதனால் எனக்குக் கோளினாலே எந்த விதத் துன்பமும் இல்லை' என்று சொன்னார். இத்தகைய நிலை அடியார்களுக்கு உண்டாகும். 'சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளியொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற வேதரும் சேதமின்றே” என்று கந்தர் அந்தாதியிலும் அருணகிரியார் முருகனை நம்பின வர்களுக்கு நவக்கிரகங்களால் வரும் துன்பம் இல்லை என்று பாடியிருக்கிறார். 2 இத்தகைய மனத்திண்மை வரவேண்டுமானால் மனத்தை உலகியற் புயலுக்கு இடமாக்காமல் முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை நினைக்கின்ற இடமாக, அவன் எழுந்தருளி இருக்கும் சிங்காதனமாக ஆக்க வேண்டும். மனத்திலே அடிக்கடி நினைத்துப் பார்த்துப் பழகினால் அந்தத் தியானம் முறுகும்; பார்க்கும் இடங்களில் எல்லாம் அவன் தோற்றம் தோன்றும். இத்தகைய சிறந்த நிலை வந்தவர்களுக்கு வினையினால் வரு கின்ற துன்பம் தெரியாமல் மரத்துப் போய்விடும். 1O9