பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே? (குமரேசருடைய இரண்டு திருவடிகளும் அவற்றில் புனைந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், தோள்களும், அவற்றில் அணிந்த கடம்பமலர் மாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றினால், கொடிய நாள் என்னை என்ன செய்யும்? தீய வினைதான் என்ன செய்யும்? என்னை நாடி வந்த கொடிய கிரகம் என்ன செய்யும்? கொடுமையான கூற்றுவன் என்ன செய்வான்? தோன்றி.டின் என் செயும் என்க. கோள் - கிரகம் கூற்று - யமன்.) 116