பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 திருவருளிலே மிதந்து அருணகிரியார் பாடும்போது அவர் எத்துணை இன்பத்தை அடைந்திருப்பார் அவர் பெருமிதத்தோடு முருகன் திருவருளாற் பெற்ற பேற்றைச் சொல்லும்போது அத்தனையும் உண்மை என்ற நினைவு நமக்கு உண்டாகிறது. கந்தர் அலங்கார விளக்கச் சொற்பொழிவைக் கேட்ட அன்பர்கள் சில சமயங்களில் தம்முடைய உவகைப் பெருக்கை என்னிடம் வெளியிடுவதுண்டு. பல சமயங்களில் அவர்களுடைய கண் இமை ஈரம் அடைவதைக் கண்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் அருணகிரிநாதப் பெருமானுடைய பரோபகாரத்தை நினைந்து வாழ்த்துகிறேன். "இந்தப் பாடல்களில் என்ன இருக்கிறது? காவியச் சுவை உண்டா? கதை உண்டா?" என்று கேட்பவர்கள் இருக்கலாம். கவிஞன் தான் கொண்ட உணர்ச்சியைப் பிறரும் அடையும்படி செய்வதைக் காட்டிலும் உயர்ந்த ஆற்றல் வேறு இல்லை. அந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தால் அருணகிரி நாதரின் பாடல்கள் உணர்ச்சி ஊட்டுபவை. அவர் முருகன் திருவருளால் பெற்ற நலங்களைப் பெருமிதத்தோடு சொல்லுகையில் நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. "நான் இப்படித் துன்புறுகிறேனே! என்னை ஆட்கொள்ள மாட்டாயா?" என்று பாடும்போது நாமும் உருகுகிறோம். 'இவ்வாறு என்னை ஆட்கொள்ள வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்ளும்போது அதே விண்ணப்பத்தை ஆண்டவனிடம் நாம் திருப்பிச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. நம்மை நோக்கி உபதேசம் செய்வது போலப் பாடும் பொழுது அது தெளிவாக விளங்குகிறது. இறையருள் அநுபவம் உள்ளவர்களின் வாக்கைப் படிக்கும் போது நாமும் நல்ல மனநிலையோடு இருந்து படிக்க வேண்டும். மென்மையும் தண்மையும் உடைய மலரில் அது குலையாமற் கலையாமல் தாதுதித் தேன் உண்ணும் வண்டைப்போல இத்தகைய பாடல்களுக்குள் உள்ளத்தைச் செலுத்த வேண்டும். சோதனை போடும் அறிவுக்கு இந்தப் பாடல்கள் ஓரளவுதான் சுவையை உண்டாக்கும். அங்கே உண்டாவது வெறும் இலக்கியச் 12C