பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை சுவைதான். அநுபூதிமான்களின் பாடலுக்குள் சோதனை செய்யும் கருத்தோடு புகுவதைவிட்டு அநுபவத்தைப் பெறும் பக்தி யோடும் பரிவோடும் புக வேண்டும். அப்போது அந்தப் பாடல் களைப் பாடின பெரியோர்கள் இன்ன நிலையிலிருந்து பாடியிருக்க வேண்டும் என்ற உணர்வு ஓரளவாவது உண்டாகும். நன்றாக ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்து விட்டால் இந்தப் பாடல்களிலேயே உள்ளம் உருகிக் கரைந்து புளகம் போர்ப்பக் கண்ணி வார நிற்கும் அற்புதமும் நிகழும். யாவும் நாம் அணுகும்போது உள்ள மனநிலையைப் பொறுத்தவை. அருணகிரிநாதர் பாடல்களில் அப்படி ஆழங்காற்பட்டு மூழ்கி உருகும் இடங்கள் பல உண்டு. நம்முடைய உள்ளத்தின் நுட்ப மான அநுபவ இதழ்கள் மலர்ந்து மணம் பரவி நம்மை மறந்து நிற்கச் செய்யும் ஆற்றல் இப்பாடல்களுக்கு இருக்கிறது. தாயு மாணவர் முதலிய அநுபவ ஞானிகள் அவ்வாறு அநுபவித்தவர்கள். அலங்காரம் நூறு பாடல்களை உடையது. மேலும் பொங்கி வழிந்தவைபோன்ற ஏழு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஓரிடத்தில் வந்த கருத்தே வேறு சில இடங்களில் வந்திருக்கும். ஆனால் வெவ்வேறு உருவத்தில் அவை இருக்கும். சில செய்தி களை அருணகிரியார் நேரே சொல்லாமல் கற்பனை நயத்தோடு சொல்லுவார். ★ இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரம் 39-ஆவது பாடலி லிருந்து 44-ஆம் பாடல் வரையில் ஆறு பாடல்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. முதல் பாடலில், பிறந்து திரிந்து இறந்து வரும் நிலை மாறி இறைவனோடு ஒன்றுகின்ற முத்தியின்பம் வேண்டும் என்ற வேண்டுகோள் அமைந்திருக்கிறது. இரண்டா வது பாடல், முருகப் பெருமானுடைய திருவடிக்கு ஆளானபிறகு ஊழ்வினையின் உறைப்புப் போய்விட்டது என்ற கருத்தை அழகாகக் காட்டுகிறது. மூன்றாவது பாடல், பெண் மயலில் சிக்காமல் இறைவன் திருவடித் தாமரையைப் பற்றிக் கொள்ளும் நெறியைச் சொல்கிறது. நான்காவது பாடல் தலையினால் அவனை 121