பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கட்டுண்டு அல்லற்படுவதையும் அருணகிரியார் சொல்கிறார். பக்தித் துறை வழியே ஆனந்த வாரியில் இழிந்தால் புத்தி தெளியும் என்றும், செல்வம் ஆற்றில் வரும் பெருக்குப் போன்றது என்றும், வாழ்க்கைக்கு இன்ப துன்பங்கள் இரு கரைகள் போல் உள்ளன என்றும், காவிரி கரிக்கோட்டு முத்தைச் சுழித்து ஓடு கிறது என்றும், இறைவனுடைய கோலத்தையும் விளையாடலை யும் சொல்லாதவர்களுக்கு முத்தியின் பலன் கிட்டாது என்றும் அறிவுறுத்துகிறார். மகளிர் கண்டுண்ட சொல்லியர் என்பதும், அவர் மயலாகிய கள் தன்னை உண்டவரை மயங்கச் செய்யும் என்பதும், இறைவனுடைய தரிசனம் பெற்றவர்களுக்கு நாளாலும் வினையாலும் கோளாலும் கூற்றுவனாலும் வரும் துன்பங்களால் அச்சம் உண்டாகாது என்பதும் இப் பாடல்களில் வருகின்றன. படர்க்கையாக இரண்டு பாடல்களும் (1, 6), முருகனை முன்னிலைப் படுத்திய பாடல்கள் மூன்றும் (2, 3, 5), நெஞ்சை விளித்துக் கூறும் பாடல் ஒன்றும் (4) இப்புத்தகத்தில் உள்ளன. இவற்றுக்கு விளக்கம் கூறும்போது இடையிடையே வரும் கருத்தைத் தெளிவிக்கப் பிற நூல் மேற்கோள்களைச் சொல் கிறேன். அவற்றையும் ஓரளவு விளக்க வேண்டி நேர்கிறது. அந்த முறையில் பாரதி பாடல், திருவாசகம், தாயுமானவர் பாடல், சுந்தரர் தேவாரம், திருக்குறள், பெரிய புராணம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களிலிருந்து சில செய்யுட்களின் விளக்கங்களும் இதில் இடம் பெறுகின்றன. பழங் கதைகள், கற்பனைக் கதைகள், உவமைகள் ஆகியவை கருத்தை விளக்கச் சிறந்த கருவிகளாக இருக்கின்றன. நுட்பமான கருத்தையும் ஏற்புடைய உவமையை எடுத்துக் கூறித் தெளிவாக்கி விடலாமென்பது அநுபவத்தில் யான் கண்ட உண்மை. ஆதலின் இச்சொற்பொழிவுகளில் பல பல உவமைகள் இடையிடையே விரவியிருக்கும். இதற்கு முன் வெளியான புத்தகங்களைப் படித்த சில அன்பர்கள் அவற்றைப் பாராட்டி எழுதி வருகிறார்கள். என் நூல்களை நன்கு படித்து அவற்றிலுள்ள நுட்பமான பகுதிகளைப் பாராட்டி அடிக்கடி எழுதும் ஒரு பேரன்பர் அணிமையில்