பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி நீங்கள் கேட்டிருப் பீர்கள். பக்தி மயமான பாட்டுக்கள் அவை. அவற்றைப் பாடியவர் கோபாலகிருஷ்ண பாரதியார். அவர் நல்ல சிவ பக்தர். சங்கீதத் தில் வல்லவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இருந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர். ஒரு சமயம் கோபால கிருஷ்ண பாரதியார் தாம் இயற்றிய நந்தனார் சரித்திரப் பாடல்களைக் காரைக்காலில் காலட்சேபம் செய்து வந்தார். ஒரே கூட்டம். இரவு எட்டு மணிக்குக் காலட் சேபம் ஆரம்பித்தால் மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் முடியும். அக்கூட்டத்திற்குப் பொது மக்கள், வியாபாரிகள் ஆகிய எல்லோரும் வருவார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்களும் வருவார்கள். இவர்கள் காலையில் பத்துமணிக்குக் காரியாலயங் களுக்குப் போனால் தலை சுற்றும். நந்தனார் சரித்திரத்தை, தங்களை மறந்து, இரவு முழுவதும் கேட்டவர்கள் அல்லவா? அவர்கள் தூங்கி வழிவதை வெள்ளைக்கார அதிகாரி பார்த்தார். யாராவது ஒருவன் தூங்கினால் அவனைத் திருத்தலாம். எல்லோரும் உறங்கும்போது என்ன செய்வது? அவர் அவர்களைக் கூப்பிட்டு, 'ஏன் தூங்குகிறீர்கள்? இரவு தூங்காமல் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இங்கே பெரியவர் ஒருவர் வந்திருக்கிறார். இரவு முழுவதும் காலrேபம் பண்ணுகிறார். அதைக் கேட்டு வருகிறோம்" என்று சொன்னார்களாம். 'போலீஸ் காரனை விட்டு அவரைத் துரத்து' என்று சொல்லவில்லை அந்த அதிகாரி. 'அத்தனை பேரையும் மயக்குகின்ற அந்தச் சரித்திரம் என்ன?’ என்று கேட்டாராம். 'ஒரு பஞ்சமன் எம்பெருமானிடத்தில் கொண்ட பக்தியி னாலே அருள் பெற்ற வரலாறு அது. அதைப் பாடினவர் ஒரு பிராமணர் என்று சொன்னார்கள். 'அப்படியா? அதை அவசியம் நான் வந்து கேட்கவேண்டும்' என்று சொல்லி அன்றைத் தினம் அவரும் அங்கே சென்றிருந்தாராம். பாரதியாரின் கதையை ஆயிரக்கணக்கான மக்கள் மிக்க சுவாரசியமாக ரசித்ததைப் பார்த்து, எல்லா மக்களையும் மயக்குகின்ற இது நிச்சயமாகச் சிறந்ததாக இருக்கவேண்டும் என்று கண்டு, 'அதை நானே 13+