பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் கிறீர்கள் போலிருக்கிறது. மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் தருகிறேன்' என்று சொல்லி உடனே ஒரு செய்யுள் பாடிக் கொடுத்துவிட்டார். பாரதியாரின் பாடலில் பெருமை குறைவாக இருக்கலாம். ஆனால் இறைவன் திருவருள் அநுபவம் இருந்ததாகையால் பிள்ளை அவர்களின் மனத்தையே நெகிழச் செய்து கவர்ந்துவிட்டது. இலக்கியத்துக்கு இலக்கணம் பக்திச் சுவை ததும்ப, அநுபவ முதிர்ச்சியை அள்ளிக் கொட்டும் பாடல்களில் புலமை குறைவாக இருப்பது தவறு ஆகாது. 'ஆரிஷம்" என்று ஒர் இலக்கண விதி உண்டு. நல்ல அநுபவம் உடைய பெரியவர்கள் பாடியவை இலக்கண விதிகளோடு பொருந்தாமல் இருந்தாலும் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கனவே. ஆரிஷம் என்பது ரிஷிகளின் முறை என்ற பொருளுடையது. "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புவது' முறை. இதைக் கொண்டு நாம் இலக்கணப் பிழையையுடைய பாட்டுக்களைப் பாடலாமா? நாமும் ரிஷிகளானால் பாடலாம். தேவாரம், சாஸ்திரம் இரண்டிலும் தேவாரம் சாஸ்திரத்தை யும்விடச் சிறந்தது எனக் கருதுவதற்குக் காரணம் தேவாரம் நம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. அதற்குக் காரணம் அதைப் பாடியவர்கள் சிறந்த அநுபவிகளாக இருந்தார்கள். அந்தப் பாடல்களைச் சொல்லும்போதே, 'நமக்கு அந்த நிலை வர வில்லையே! என்னும் ஏக்கம் உண்டாகிறது. ஏங்குகிற இடத்தில் தான் நெகிழ்வு உண்டாகிறது. உருக்கம் அதற்கு அப்பால் உண்டாகும். ஏங்கத் தெரிந்தால் உருகத் தெரிந்து கொள்ளலாம். உருகத் தெரிந்தால் புலம்பத் தெரிந்து கொள்ளலாம். புலம்பத் தெரிந்தால் ஆண்டவன் அருள் கிடைக்கும். கடந்த ஒர் ஆண்டாக ஆண்டவனை நினைந்து நினைந்து, ஏங்கி உருகிப் புலம்புவதற்கு அடித்தளமாக அருணகிரியார் அமைத்துக் கொடுத்த அலங்காரப் பாடல்களில் நாற்பது பாட்டுக் களைப் பார்த்திருக்கிறோம் என்பதில் நம் எல்லோருக்கும் ஒரு பெருமிதம் உண்டாகிறது. அருணகிரியார்தாம் எம்பெருமானின் சிறப்பை எந்த எந்த வகைகளில் எல்லாம் எடுத்துக் கூறி நமது 133