பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 மனம் அவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உய்ய வழி காட்டு கிறார் இன்று மாணிக்கம் போன்ற பாட்டைப் பார்க்கப் போகிறோம். 3 மாணிக்கம் செக்கச் செவேல் என்று இருக்கும். உதய சூரிய னின் நிறம் எப்படி இருக்கிறது? அந்தச் சிவப்பு ஒளி நம்மை அதிகமாகக் கவர்வதற்குக் காரணம் நீலப் பெருங் கடலுக்கு மத்தியிலே, நீல வானின் அடி விளிம்பிலே தோன்றுவதால்தான். அப்படித் தோன்றுகிறான் முருகன். முருகன் மயிலின் மேலே வரும் காட்சி அவ்வாறு இருக்கிறது. வெறும் சிவப்பு ஒர் அழகு. பச்சைக்கு நடுவில் வைத்துப் பார்த்தால் பின்னும் அழகாக இருக்கும். பச்சை மயிலுக்கு நடுவிலே சிவந்த ஒளிப் பிழம் பாகிய முருகன் மாணிக்கமாகத் திகழ்கிறான் என்பதை இந்தப் பாட்டிலே அருணகிரியார் சொல்கிறார். அமுதம் கடைந்தது தேவர்களுக்கு ஒரு நாள் ஒர் ஆசை தோன்றியது. உலகில் இருக்கிற மக்களும் சாகிறார்கள். நாமும் சாகிறோமே! சாவாமல் இருப்பதற்கு ஏதாவது மருந்து வேண்டும். மூலிகைகளை எல்லாம் கொண்டு வந்து கலுவத்தில் இட்டு அரைத்துச் சாப்பிடலாமா? அது நம் பெருமைக்கு அடுக்காது’ என்று யோசனை பண்ணி னார்கள். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே அமிருதம் என்ற ஒன்று, அதை எப்படி அடைகிறது?’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான் அவர்களுக்கு உபகாரம் செய்ய வந்தார். 'தேவர்களே, நான் பாற்கடல் பள்ளியை விட்டு எழுந்து விடுகிறேன். நீங்கள் இந்தப் பாற்கடலைக் கடைந்தால் அமிருதம் கிடைக்கும்' என்று யோசனையும் சொல்லிக் கொடுத்தார். பாற்கடலைக் கடைவதானால் நல்ல மத்து வேண்டுமே! உலகத்திலேயே மிகப் பெரிய மலையாக இருப்பது மகாமேரு. அதில் உள்ள ஒரு சிகரம் மந்தரம். அதைக் கொண்டு வந்தார்கள். அதை மத்தாக வைத்துக் கொண்டார்கள். மத்து இருந்துவிட்டால் போதுமா? தூண் வேண்டுமே! அமிருதத்தைக் கடையும்போது 134