பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் படுத்த படுக்கையாய்த்தான் கிடக் கிறான். ஆனால் அவன் மனம் எங்கு எங்கெல்லாம் சுற்றித் திரிகிறது! ஒரு நிலையில் நிலைத்து இருக்கிறதா? தூங்குகிறோம். உடம்பு கட்டையாகக் கிடக்கிறது. ஆனால் சொப்பனத்திலே எங்கெங்கோ நம் மனம் சுற்றிச் சுற்றித் திரிகிறது. ஆகவே உடம்பு அசையாமல் இருக்கிறவர்கள் எல்லாம் ஒரே நிலையில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. - சதாசிவப் பிரம்மேந்திர சரஸ்வதிகள் பெரிய ஞானி. அவர் எங்கும் தங்காமல் சுற்றிக்கொண்டே இருந்தார். உடல் ஒடிக் கொண்டிருந்ததே தவிர அவர் உள்ளம் ஒரே நிலையில் இருந்தது. சரீரம் உட்கார்ந்திருந்தும் உள்ளம் நமக்கு ஓடிக்கொண்டிருக்க, அவருக்கு உடல் ஒடிக்கொண்டிருந்தும் உள்ளம் நிலைத்து இருந்தது. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் அவருடைய உள்ளம் எம்பெருமானின் திருவடியிலேயே நிலைத்து இருந்தது. உலகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் அத்தகையவர் களுடைய உள்ளத்தின் நிலை மாறுவது இல்லை. உதித்து உழல்வது பிறக்கலாம். பிறப்பது தவறு அன்று. பிறந்தவன் இறக்கத் தான் வேண்டும். ஆனால் பிறந்து திரிகிறானே, மனம் ஒரு நிலைப்படாதவாறு உழல்கிறானே, அவன் தவறு இழைக்கிறான். பலவிதமான அழுக்குக்களை பூசிக்கொள்கிறான். உடம்பில் சேர்த்துக் கொள்கிற அழுக்கை நீரினாலே போக்கிக் கொள்ளலாம். ஆனால் உள்ளத்திலே பூசிக் கொள்கின்ற அழுக்கைப் போக்க வழி இல்லை. 'துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா தோல் வெளுக்கச் சாம்பருண்டு எங்கள் முத்து மாரியம்மா மணிவெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்து மாரியம்மா மனம் வெளுக்க வழியில்லை எங்கள் முத்து மாரியம்மா' என்று பாரதியார் பாடினார். மனத்தில் உள்ள மாசுகள் எல்லாம் நீங்க வேண்டுமானால் மனத்திலே இறைவனைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். அப்போதுதான் இன்பம் பெருகும். எம் பெருமான் உள்ளத்தில் வந்து அமர வேண்டுமென்றால் உழன்று 138